வைகோ வீட்டில் தோசை, ஃபில்டர் காபி, அல்வா சாப்பிட்ட விஜயகாந்த்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் வீட்டுக்கு சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு தோசை, சட்னி, அல்வா வழங்கப்பட்டுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நெல்லை மாவட்டத்தில் உள்ள கலிங்கப்பட்டியில் இருக்கும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் வீட்டுக்கு நேற்று மாலை சென்றார்.

அங்கு அவருக்கு மாலை அணிவித்து வைகோ சிறப்பான வரவேற்பு அளித்தார்.

உறவினர்கள்

உறவினர்கள்

வைகோ தனது வீட்டில் கூடியிருந்த உறவினர்களை விஜயகாந்துக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

போட்டோ

போட்டோ

வைக்கோ வீட்டு ஹாலில் அவர் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுடன் சேர்ந்து எடுத்த பெரிய புகைப்படம் இருந்ததை விஜயகாந்த் சிறிது நேரம் பார்த்தார்.

அல்வா

அல்வா

விருந்தாளி விஜயகாந்துக்கு வைகோவின் உறவினர்கள் தோசை, தக்காளி மற்று தேங்காய் சட்னி, ஃபில்டர் காபி மற்றும் அல்வா ஆகியவை பரிமாறினர். அவர் உணவை ருசித்து சாப்பிட்டார்.

தனிஅறை

தனிஅறை

சாப்பிட்ட பிறகு விஜயகாந்தும், வைகோவும் தனி அறைக்கு சென்றனர். அங்கு அவர்கள் சுமார் 15 நிமிடம் பேசிக் கொண்டிருந்தனர்.

ரசிகன்

ரசிகன்

வைகோ வீட்டில் ஒரு மணிநேரம் இருந்தார் விஜயகாந்த். அங்கிருந்து கிளம்பும் முன் விஜயகாந்த் கூறுகையில், நான் வைகோ அவர்களின் தீவிர ரசிகன். தற்போது அந்த பந்தம் மேலும் உறுதியாகியுள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+