மே 19ம் தேதிக்கு முன்பே அரவக்குறிச்சி, தஞ்சையில் தேர்தலை நடத்த வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்
சென்னை: வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 19 ம் தேதிக்கு முன்பாக அரவக்குறிச்சி, தஞ்சையில் சட்டசபை தேர்தலை நடத்த வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டில் தற்போது நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலை ஜனநாயக முறையில் தேர்தல் ஆணையம் நடத்தவில்லை. அதிமுக, திமுகவுக்கு மாற்றாக உருவாக்கப்பட்டுள்ள தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி, புதிய வாக்காளர்கள், இளம் தலைமுறையினர், நடுநிலையாளர்கள் உள்ளிட்டோரிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனை பொறுத்துக் கொள்ள முடியாத அதிமுகவும், திமுகவும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் இரு கட்சிகளும் பண வினியோகத்தில் ஈடுபட்டதாக பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவித்தும் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை.
நள்ளிரவு வரை பண வினியோகத்தில் ஈடுபட்டதுடன், வாக்குச்சாவடிக்கு செல்லும் வாக்காளர்களுக்கு பட்டப்பகலில் காவல்துறையினர் எதிரிலேயே பகிரங்கமாக பண வினியோகம் நடைபெற்றதாக ஏராளமான புகார்கள் குவிந்தன. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகார்கள் மீது தேர்தல் ஆணைய அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியத்துடன் செயல்பட்டனர்.
வாக்குச்சாவடிக்கு வந்த வாக்காளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படவில்லை. பெரும் பாலான இடங்களில் ஆளும் கட்சியினரின் அராஜகத்திற்கு பயந்து பொதுமக்கள் வாக்களிக்க வரவில்லை. பல்வேறு இடங்களில் தேமுதிக வேட்பாளர்கள், அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் தேமுதிக தேர்தல் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தி அதிமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டனர்.
காவல் துறையினரும் அவர்களுக்கு துணைபோனது கண்டனத்திற்கு உரியது. இதற்கு தேர்தல் ஆணையம் முழு ஒத்துழைப்பு அளித்து, அராஜகக்காரர்களை பாதுகாத்தது பொதுமக்களை மேலும் அச்சமடையச் செய்தது.
மேலும், தமிழகம் முழுவதுமே பண வினியோகம் நடைபெற்று வந்த நிலையில், அதிக அளவில் பணம் மற்றும் பரிசுப்பொருள் வினியோகம் செய்யப்பட்டதாகக் கூறி அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது ஏற்கத்தக்கது அல்ல.
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 19-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு திருமங்கலம், சங்கரன்கோவில், ஸ்ரீரங்கம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வகையிலேயே மீண்டும் அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆகவே, 19-ம் தேதிக்கு முன்பே இரு தொகுதிகளிலும் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும்''என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications