உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது தற்கொலைக்கு சமம்.. நிர்வாகிகள் கருத்தால் கடுப்பில் விஜயகாந்த்!
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது தற்கொலைக்கு சமமானது என நிர்வாகிகள் கருத்து தெரிவித்ததால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடும் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.
சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டது தேமுதிக. ஆனால் டெபாசிட்டைதான் தேமுதிக பறிகொடுத்தது.
இதனால் மக்கள் நலக் கூட்டணியோடு இனி கூட்டணியே வேண்டாம் என கூறி வருகின்றனர் தேமுதிக நிர்வாகிகள். இதனிடையே உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தை விஜயகாந்த் நேற்று நடத்தினார்.

தற்கொலைக்கு சமம்
இக்கூட்டத்தில் பேசிய பலரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவே வேண்டாம்... இது தற்கொலைக்கு சமம் எனக் கூறியுள்ளனர். மேலும் உள்ளாட்சித் தேர்தலை அப்புறம் பார்க்கலாம்.. முதலில் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவிக்க வேண்டும் என்றும் கெடுவும் விதித்தனர்.

கட்சியை விட்டு போங்க
நிர்வாகிகளின் இந்த பேச்சால் விஜயகாந்த் கடும் அதிருப்தி அடைந்தாராம். அப்போது, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடலாம் என்று சொல்லுகிறவர்கள் மட்டும் கட்சியில் நீடிக்கலாம்... மற்றவர்கள் எல்லாம் கட்சியை விட்டு போய்விடுங்கள் என காட்டமாக கூறி கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதாம்.

உடனே கட்சி மாறிய நிர்வாகிகள்
விஜயகாந்த் இப்படி பேசியதால் அதிருப்தி அடைந்த நிர்வாகிகள் நேற்றே கட்சி தாவவும் தொடங்கிவிட்டனர். இத்தனை ஆண்டுகாலம் சொந்த காசை போட்டு கட்சி பணி செய்த எங்களுக்கு இதுதான் மரியாதையா? என கொந்தளித்து கிடக்கின்றனர் தேமுதிக நிர்வாகிகள்.

எதிர்காலமே கேள்வி குறி
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது என விஜயகாந்த் முடிவெடுத்தால் நிச்சயம் தேமுதிக கலகலக்கும். அதுவும் மக்கள் நலக் கூட்டணியோடு மீண்டும் கூட்டணி அமைத்து உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பதாக அறிவித்தால் கட்சியே காணாமல்தான் போகும் என்கின்றனர் தேமுதிகவினர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications