காமன்வெல்த்துக்காக கடையையெல்லாம் அடைக்க முடியாது - விக்கிரமராஜா

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், காமன்வெல்த் மாநாட்டில் இந்திய பிரதமர் கலந்து கொள்ளக் கூடாது என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை வணிகர் சங்க பேரமைப்பு வரவேற்கிறது.
இந்த சூழ்நிலையில் தமிழகம் முழுவதும் வருகிற 12ந் தேதி கடையடைப்பு நடத்தப்போவதாக சிலர் கூறுகின்றனர். இன்றைய சூழலில் கடையடைப்பு என்பது தேவை இல்லாதது.
ஒவ்வொரு வியாபாரியும் வட்டிக்கு கடன் வாங்கி வியாபாரம் செய்து வருகிறார்கள். கடையடைப்பு நடத்தினால் ஒவ்வொரு கடைக்காரரும் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்படுவார்கள். வேலைக்கு தொழிலாளர்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. கடையடைப்பு என்றால் தொழிலாளர்கள் ஊருக்கு சென்று விடுவார்கள். பின்னர் மறுநாள் எப்படி கடையை நடத்துவது?
எனவே பொது பிரச்சனைக்காக கடைகளை அடைக்கச் சொல்வது முறையல்ல. காமன்வெல்த் பிரச்சினைக்காக அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம், மறியல், உண்ணாவிரதம் நடத்துவது ஏற்கத்தக்கது. ஆனால் கடைகளை அடைக்க சொல்வதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே கடைகளை அடைக்க யாரும் வற்புறுத்தக் கூடாது.
சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்த்தும், உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தை எதிர்த்தும் வருகிற 19ந் தேதி சென்னையில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்துகிறோம். அப்போதும் வியாபாரிகள் கடைகளை அடைக்க மாட்டார்கள். வழக்கம்போல் கடைகள் திறந்திருக்கும் என்றார் அவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications