விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் கோர வெடி விபத்து.. பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு!
விருதுநகர்: விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 22 பேர் பலியானதாக தகவல் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் முதலில் 4 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து வந்த நிலையில் தற்போது உயிரிழப்பு 22 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில், தொழிலாளர்கள் ஞாயிற்றுக்கிழமையான இன்று பணியில் ஈடுபட்டிருந்தபோது பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும், இந்த விபத்தில் முதலில் 4 பேர் பலியானதாக தகவல் தெரியவந்தது.

வனஜா பட்டாசு ஆலையில் வெடி மருந்துகள் பயங்கர சப்தத்துடன் வெடித்துள்ளன. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவி, பயங்கர சத்தத்துடன் வெடிக்கத் தொடங்கியது. இந்த வெடி விபத்தில் 4 அறைகளும் சேதமடைந்தன. விபத்தின் தாக்கத்தால் பட்டாசு ஆலையின் 4 அறைகள் முழுமையாக இடிந்து தரைமட்டமானதுடன், சுமார் 10 கி.மீ தூரம் வரை அதிர்வு உணரப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் முதலில் 4 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது உயிரிழப்பு 22 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தின் போது பணியில் இருந்த 22 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
விருதுநகர் மாவட்டம் தமிழ்நாட்டின் பட்டாசு தயாரிப்பு மையமாக அறியப்படுகிறது. சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான பட்டாசு தயாரிப்பு ஆலைகள் உள்ளன. தொடர்ந்து இப்பகுதி பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன. வெடி விபத்துகள், பட்டாசு தொழிலில் பாதுகாப்பு நடைமுறைகளின் போதாமை குறித்து கேள்வி எழுந்து வருகிறது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications