சென்னையில் தவிக்கும் சொந்தங்களை பற்றி அறிய வோடஃபோனின் புதிய சேவை
சென்னை: சென்னையில் வெள்ளத்தில் சிக்கியுள்ள சொந்தங்களின் நிலை பற்றி தெரிந்து கொள்ள வோடஃபோன் நிறுவனம் உதவி செய்கிறது.
கடந்த 1ம் தேதி பெய்த கனமழையால் சென்னை வெள்ளத்தில் தத்தளிக்கிறது. சென்னையின் புறநகர் பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மின் இணைப்பு, தொலைத் தொடர்பு, போக்குவரத்து இல்லை.
Please #retweet to help those in #ChennaiFloods and their families and Friends. #ChennaiRainsHelp #prayers ! pic.twitter.com/i3ycxHwmTV
— Sherry says (@1shraddha1) December 4, 2015 வெள்ளத்தில் சிக்கியுள்ள சொந்தங்களுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் பலரும் அல்லாடி வருகிறார்கள். இந்நிலையில் அவர்களுக்கு உதவ வோடஃபோன் நிறுவனம் முன்வந்துள்ளது.
சென்னை வெள்ளத்தில் மாயமானவர்களை கண்டுபிடிக்க வோடபோன் அவசர உதவி எண்ணை அறிவித்துள்ளது. சென்னை மற்றும் தமிழகத்தில் வசிப்பவர்கள் உங்களின் வோடபோன் எண்ணில் இருந்து அவசர உதவி எண்ணான 1948க்கு போன் செய்தால் மாயமானவர்கள் கடைசியாக எந்த இடத்தில் இருந்து போன் பேசினார்கள் என்ற தகவல் உங்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பி வைக்கப்படும். நீங்கள் போன் செய்த 2 மணிநேரத்திற்குள் உங்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும்.
சொந்தங்கள் பற்றி எதுவுமே தெரியாமல் இருக்கும் நிலையில் இந்த சேவையை பயன்படுத்தி எதையாவது தெரிந்து கொள்ளலாம் அல்லவா.
Can’t trace your dear one in Chennai? DM your & person’s name & Vodafone no, will SMS u in 2hrs their last called location #chennairainshelp
— Vodafone India (@VodafoneIN) December 3, 2015 ட்விட்டரில்
சென்னையில் சிக்கியுள்ள சொந்தங்களை கண்டுபிடிக்க முடியவில்லையா? உங்களுடைய மற்றும் உங்கள் சொந்தங்களின் பெயர் மற்றும் வோடஃபோன் எண்ணை ட்விட்டரில் டைரக்ட் மெசேஜ் செய்தால் 2 மணிநேரத்திற்குள் அவர்கள் கடைசியாக போன் பேசிய இடத்தின் விபரம் அனுப்பி வைக்கப்படும்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications