மின்துறை அமைச்சர் 'நத்தம்' போட்டியிட்ட ஆத்தூர் தொகுதியில் இருளில் நடந்த வாக்குப் பதிவு
திண்டுக்கல்: தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் போட்டியிட்ட ஆத்தூர் தொகுதியில் 3 வாக்குச் சாவடிகளில் மின்சாரம் இல்லாமல் எமர்ஜென்சி விளக்குகள் உதவியுடன் இரவு 7 மணி வரை வாக்குப் பதிவு நடந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டசபை தொகுதியில் அதிமுக வேட்பாளராக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி ஆகியோர் போட்டியிட்டனர். இத்தொகுதிக்குட்பட்ட சோலைக்காடு, பன்றிமலை உள்ளிட்ட கிராமங்களுக்கு திசையன்கோட்டை துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படுகிறது.

தேர்தலையொட்டி மின் வினியோகம் தடை இல்லாமல் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்த நிலையில் இப்பகுதியில் கனத்த மழை பெய்தது. இதனால் நேற்று முன்தினம் இரவில் மின் வினியோகம் தடைப்பட்டது.
இருப்பினும் வாக்குப் பதிவையொட்டி மின்சாரம் வந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் மின்விநியோகம் வழங்கப்படவில்லை. வேறு வழியில்லாமல் 3 வாக்குச் சாவடிகளில் எமர்ஜென்சி விளக்குகள் உதவியுடன் இரவு 7 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது.
இந்த வாக்குச் சாவடிகளில் சோலைக்காடு, அழகுமடை, முருக்கடி கிராமங்களின் 2600 வாக்காளர்களில் 2019 வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications