வாக்கி டாக்கி ஊழல் குறித்து விசாரிக்க வேண்டும்: தலைமை செயலாளர், உள்துறை செயலாளரிடம் திமுக மனு
வாக்கி டாக்கி வாங்கியதில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக விசாரிக்க வேண்டும் என தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் உள்துறை செயலாளரிடம் திமுக மனு அளித்துள்ளது.
சென்னை: வாக்கி டாக்கி வாங்கியதில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக விசாரிக்க வேண்டும் என தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் உள்துறை செயலாளரிடம் திமுக மனு அளித்துள்ளது.
காவல்துறைக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் பலகோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் வாக்கி டாக்கி கொள்முதலில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என ஜெ.அன்பழகன் மனு அளித்துள்ளார். பணியில் உள்ள நீதிபதியை கொண்டு வாக்கி டாக்கி ஊழலை விசாரிக்க வேண்டும் என உள்துறைச் செயலாளர் மற்றும் தலைமைச் செயலாளரை சந்தித்து திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகன் மனு அளித்துள்ளார்.
காவல் துறையை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் வாக்கி டாக்கி கொள்முதல் செய்த விவகாரத்தில், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications