சரியாவே சொல்லலை, அதான் தோத்துட்டோம்.. சொல்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்!
நெல்லை: மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம், விவசாயக் கடன் தள்ளுபடி, 100 நாள் வேலைத் திட்டம் போன்ற அரசின் சாதனைகளை, திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்லாததால்தான் காங்கிரஸ் கட்சி லோக்சபா தேர்தலில் தோல்வியைச் சந்தித்தது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

நெல்லை வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை போன்ற பெருநகரங்களில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடிக் கட்டடங்களுக்கு முறையான அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த முதல்வர் உத்தரவிட வேண்டும். பல இடங்களில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடிக் கட்டடங்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாகப் புகார் வந்துள்ளது.
லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்ததை காங்கிரஸ் கட்சி முழு மனதோடு ஏற்றுக்கொள்கிறது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம், விவசாயக் கடன் தள்ளுபடி, 100 நாள் வேலைத் திட்டம் போன்ற அரசின் சாதனைகளை, திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்லாததால்தான் காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்தித்தது.
தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்த காரணத்தால் காங்கிரஸ் கட்சி தனித்தன்மையை இழந்து விட்டது. 1967-இல் இழந்த காமராஜர் ஆட்சியை மீண்டும் கொண்டுவர முடியாமல் போனது. 2006-இல் திமுக அமைச்சரவையில் காங்கிரஸ் பங்குபெறாதது தவறு.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து கிடைத்தது. இப்போது பாஜக அரசு இந்தியைத் திணிக்க முயன்று வருகிறது. சம்ஸ்கிருத வாரம் கொண்டாடப்படும் என அறிவித்துள்ளது.
ரயில்வே, பாதுகாப்புத் துறையில் அன்னிய முதலீடு கொண்டுவரப்படும் எனவும் தெரிவித்துள்ளது. பாதுகாப்புத் துறையில் அன்னிய முதலீட்டை அனுமதித்தால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும்.
தாமிரபரணி ஆற்றில் ரூ.369 கோடியில் கொண்டுவரப்பட்ட வெள்ளநீர்க் கால்வாய்த் திட்டம் முடங்கி இருப்பது குறித்து மக்கள் பிரதிநிதிகள்தான் அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கை வேண்டும்.
வரும் செப்டம்பர் மாதம் தூத்துக்குடியில் நடைபெறும் பிறந்த தின விழாவில் நடிகர் சிவாஜியின் சிலை திறக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications