காவிரி ஆணையம் அமைப்பதில் சில சிக்கல்கள் உள்ளது.. விரைவில் தீர்வு காணப்படும்- குமாரசாமி
காவிரி ஆணையம் அமைப்பதில் சில சிக்கல்கள் இருக்கிறது, விரைவில் வாரிய உறுப்பினர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
Recommended Video

டெல்லி: காவிரி ஆணையம் அமைப்பதில் சில சிக்கல்கள் இருக்கிறது, விரைவில் வாரிய உறுப்பினர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
இன்னும் முறைப்படி நீதிமன்ற உத்தரவை பின்பற்றி காவிரி ஆணையம் அமைக்கப்படவில்லை. காவிரி ஆணையம் தலைவர் அறிவிக்கப்பட்டு, தமிழக உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்ட பின்பும் கூட, கர்நாடகா அதன் உறுப்பினர்களை அறிவிக்காமல் உள்ளது.

இதனால் இன்னும் ஆணையம் செயல்படுத்தப்படாமல் உள்ளது. ஆனால் கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மிகவும் அதிகமாக மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.ஆனால்
இந்த நிலையில் காவிரி பங்கீடு தொடர்பாக விவாதிக்க பிரதமர் மோடியை கர்நாடக முதல்வர் குமாரசாமி இன்று சந்திக்க உள்ளார். காவிரி ஆணையம் முழுமையாக அமைக்கப்படாத நிலையில் குமாரசாமி பிரதமரை சந்திக்கிறார். பிரதமரை சந்திக்கும் முன் அவர் நீர் வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரியுடன் சந்திப்பு நடத்தினார். காவிரி பங்கீடு குறித்து அவரிடம் ஆலோசனை நடத்தினார்.
காவிரி ஆணையத்திற்கு உரிய நேரத்தில் உறுப்பினர்கள் பெயர் பரிந்துரைக்கப்படும். காவிரி ஆணையம் அமைப்பதில் சில சிக்கல்கள் உள்ளன. காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை மதித்து கர்நாடகா நடக்கும்.
காவிரி ஆணையத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளது. அதுகுறித்து கர்நாடகா ஆலோசித்து வருகிறது. பிரதமரிடம் இதுகுறித்து பேசுவேன். ஆணையம் அமைப்பதில் இரண்டு அல்லது மூன்று பிரச்சனைகள் இருக்கிறது. இதுபற்றி மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரியுடன் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது, என்றுள்ளார்.
-
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications