தமிழகத்தில் குடும்ப ஆட்சியே இருக்க கூடாது என்பது தான் ஜெ.விருப்பம் - ஓபிஎஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்கள் வாக்களித்தது ஜெயலலிதாவுக்கு தான் என்றும் தமிழகத்தில் குடும்ப ஆட்சியே இருக்க கூடாது என்பது தான் அவரின் எண்ணம் என்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீசெல்வம் கூறியுள்ளார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் நடராஜ் நமது அணிக்கு ஆதரவு அளித்திருப்பது வரவேற்கதக்கது.

we will block family rule, says O.Paneerselvam

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நமக்கெல்லாம் முழு வடிவம் கொடுத்தவர். தமிழக மக்களுக்காக உழைத்த அவரின் கொள்கையை கட்டிக் காத்திட வேண்டும் என்றும் தமிழக மக்கள் வாக்களித்தது ஜெயலலிதாவுக்குதான் என்றும் கூறிய ஓ.பன்னீர்செல்வம், குடும்ப ஆட்சியே இருக்க கூடாது என்பது ஜெயலலிதாவின் விருப்பம் என்றும் கூறினார்.

மேலும் ஜெயலலிதாவால் வீட்டை விட்டு வெளியேற்றபட்டவர்கள் ஆட்சி அமைக்க அனுமதிக்கலாமா என அதிமுக எம்எல்ஏக்களுக்கு ஓ.பன்னீசெல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Former chief minister O.Paneerselvam says will block family rule in tamilnadu
Please Wait while comments are loading...