'வாவ்' கேம் : குஜராத்துக்காக வெறித்தனம் காட்டிய தமிழக வீரர்.. சென்னைக்காக சம்பவம் செய்த குஜராத்தி!

சென்னை : ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி கடைசிப் பந்தில் த்ரில் வெற்றி பெற்று 5வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்த ஆட்டத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தேறியுள்ளது.
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மழை காரணமாக இந்த ஆட்டம் ரத்து செய்யப்பட்டு மாற்று நாளான நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. டாஸ் வென்ற சிஎஸ்கே அணி கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 214 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த சேர்ந்த சாய் சுதர்சன் 47 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 96 ரன்கள் விளாசினார்.
குஜராத்தை வலுப்படுத்திய தமிழ்நாட்டு வீரர் :
குஜராத் டைட்டன்ஸ் அணி 214 ரன்கள் எடுக்க முக்கிய காரணமாக இருந்தவர் சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த 21 வயதான சாய் சுதர்ஷன். சென்னையைச் சேர்ந்த இவர் குஜராத் அணிக்காக நேற்று சிறப்பான சம்பவம் செய்தார். இவர் இதுவரை 4 அரைசதங்கள் அடித்துள்ளார். இந்த சீசனில் விளையாடிய 8 போட்டிகளில் சாய் சுதர்சன் மொத்தமாக 362 ரன்கள் எடுத்துள்ளார்.
சுதர்சனின் தந்தை, கடந்த 1993ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய தேசிய அளவிலான தடகள விளையாட்டு வீரராக இருந்தார். இவரது தாயாரும், தேசிய அளவிலான கைப்பந்து வீராங்கனையாக இருந்தவர். இளம் வயது முதல் கிரிக்கெட் விளையாடி வரும் சாய் சுதர்சன், 2021ல் சையது முஷ்டாக் அலி டிராபியில் தமிழ்நாடு அணி சார்பில் விளையாடினார்.
ரஞ்சி டிராபியில் தனது அறிமுக போட்டியிலேயே 179 ரன்கள் எடுத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். அதன் பிறகு விஜய் ஹசாரே டிராபியில் விளையாடினார். இதையடுத்து தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணி சார்பில் 8 போட்டிகளில் விளையாடி அவர் 358 ரன்கள் எடுத்துள்ளார். இதன் காரணமாக குஜராத் டைட்டன்ஸ் அணியில் ரூ. 20 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
இந்நிலையில் தான் ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், நம்பிக்கை நாயகனாக ஜொலித்து, நாலாபுறமும் சிக்சர்கள், பவுண்டரிகளைத் தெறிக்கவிட்டார் சாய் சுதர்சன். 47 பந்துகளில் 96 ரன்களை விளாசி, குஜராத் அணி இமாலய இலக்கை நிர்ணயிக்கக் காரணமானார்.
சிஎஸ்கே ஆட்டம் :
பின்னர், 215 ரன்கள் இலக்குடன் சிஎஸ்கே அணி பேட்டிங்கை தொடங்கியது. மொகமது ஷமி 3 பந்துகளை வீசிய நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது சிஎஸ்கே 0.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் சேர்த்திருந்தது. மழை நின்ற பின்னர் மைதானத்தை ஆய்வு செய்த நடுவர்கள் சிஎஸ்கே அணி 15 ஓவர்களில் 171 ரன்களை எடுக்க வேண்டும் என இலக்கை மாற்றி அமைத்தனர்.
இலக்கை நோக்கிய விளையாடிய சிஎஸ்கே விரைவாக ரன்கள் சேர்த்தது. கடைசி 4 ஓவர்களில் வெற்றிக்கு 54 ரன்கள் தேவையாக இருந்தது. ரஷித் கான் வீசிய 12-வது ஓவரில் ஷிவம் துபே 2 சிக்ஸர்களை பறக்கவிட 15 ரன்கள் கிடைத்தது. மோஹித் சர்மாவின் அடுத்த ஓவரை அம்பதி ராயுடு பதம் பார்த்தார். 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியை விளாசிய அம்பதி ராயுடு 4-வது பந்தில் மோஹித் சர்மாவிடமே கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.
த்ரில் வெற்றி :
வெற்றிக்கு 14 பந்துகளில் 23 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் களமிறங்கிய கேப்டன் தோனி முதல் பந்திலேயே ரன் ஏதும் சேர்க்காமல் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் ஜடேஜா களமிறங்கினார். 12 பந்துகளில் 22 ரன்கள் தேவை என்ற நிலையில் முகமது ஷமி வீசிய 14-வது ஓவரில் 8 ரன்களே சேர்க்கப்பட்டது. மோஹித் சர்மா வீசிய கடைசி ஓவரில் சிஎஸ்கேவின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவையாக இருந்தது.
கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் 5-வது பந்தை ஜடேஜா சிக்ஸருக்கு பறக்க விட ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. கடைசி பந்தை ஜடேஜா பவுண்டரிக்கு விரட்ட சிஎஸ்கே அணி 15 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

சென்னைக்காக விளாசிய குஜராத்தி :
தோனி உட்பட பலரும் ஜடேஜாவை தூக்கி வைத்துக் கொண்டாடினர். ரவீந்திர ஜடேஜா குஜராத் மாநிலம் ஜாம் நகரைச் சேர்ந்தவர். 2009ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான ஜடேஜா, 2012ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 2008 முதல் ராஜஸ்தான் அணிக்காகவும். 2011ல் கேரளா டஸ்கர் அணிக்காகவும் விளையாடியிருந்தார் ஜடேஜா.
சிறந்த ஆல்ரவுண்டரான ஜடேஜா, சிஎஸ்கே அணிக்காக பல முக்கியமான போட்டிகளில் கைகொடுத்துள்ளார். நடப்பு சீசனில், அவரது ஆட்டம் குறிப்பிடத்தக்க வகையில் இல்லை. இதனால், விமர்சனங்களும் எழுந்தன. அதுமட்டுமல்லாது, கேப்டன் தோனி களத்தில் இறங்குவதற்காக, ஜடேஜா அவுட் ஆக வேண்டும் என சி.எஸ்.கே ரசிகர்கள் கோஷமிட்ட சம்பவமும் நடைபெற்றது.
வாவ் கேம் :
இந்நிலையில், குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் இறுதிப்போட்டியில், அதாவது தனது சொந்த மண்ணில், சென்னை அணிக்காக வரலாற்று வெற்றியைத் தேடித் தந்துள்ளார் ஜடேஜா. கடைசி ஓவரின் இறுதிக்கட்டத்தில் சிஎஸ்கே ரசிகர்கள் பெரும்பாலானோர் நம்பிக்கையை இழந்துவிட்ட நிலையில், ஆபத்பாந்தவனாக நின்று சென்னை அணிக்கு கோப்பையை வென்று கொடுத்துள்ளார் ஜடேஜா.
ஐபிஎல் 2023 இறுதிப்போட்டியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் சாய் சுதர்ஷன், குஜராத் அணிக்காக வெறித்தன இன்னிங்ஸ் ஆடியதும், குஜராத்தைச் சேர்ந்த ரவீந்திர ஜடேஜா, சென்னை அணிக்காக செம்மையான இன்னிங்ஸ் ஆடி கோப்பையைப் பெற்றுத் தந்துள்ளதும், கிரிக்கெட் ரசிகர்களால் இந்தியாவின் பன்முகத்தன்மையின் சின்னமாக கொண்டாடப்படுகிறது.
-
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு -
"முதல்ல பணத்தை எடுத்து வை.." ஹார்முஸை கடக்க சுங்க கட்டணம்.. மாஸ்டர் பிளான் போட்டு தூக்கிய ஈரான் -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
சவால் விட்ட செங்கோட்டையன் அதிர்ச்சி.. எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரே இல்லாததால் கடும் அப்செட்! -
சரியான நேரத்தில் எச்சரித்த ஆனந்த் சீனிவாசன்... சட்டென எகிறிய தங்கம் விலை.. இனி என்ன நடக்கும்? -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
உன்னை கட்சியில் வைத்திருந்தால்.. அதிமுகவையே விற்றுருப்பாய்.. ஓபிஎஸ்ஸை தரக்குறைவாக பேசிய எடப்பாடி!












Click it and Unblock the Notifications