சபரிமலை ஐயப்பன் கோயில் யாத்திரை சாதாரணம் இல்லை.. விரத முறைகள் என்ன தெரியுமா?
Recommended Video

சென்னை: சபரி மலை ஐயப்பன் கோயில் பயணம் என்பது, மிகவும் புகழ் பெற்றது. கேரளா, தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா என மாநில எல்லைகளை தாண்டி வருடா வருடம் சபரிமலை செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடிதான் உள்ளது.
இருமுடி கட்டு கட்டி, 18 படியேறி ஐயப்பனை தரிசனம் செய்து பக்தர்கள் திரும்புவார்கள் என்பது மட்டுமே வெளியிலிருந்து பார்ப்போருக்கு தெரியும். ஆனால் கடும் விரத கட்டுப்பாடுகள் கொண்ட ஒரு சில கோயில்களில் சபரிமலை ஐயப்பன் கோயில் ஒன்றாகும்.
அப்படியான விரத நடைமுறைகள் என்ன என்று பார்க்கலாமா?

41 நாட்கள் விரதம்
பக்தர்கள் கார்த்திகை முதல் நாள் மாலையணிவது சிறப்பானது. குறைந்த பட்சம் 41 நாட்கள் விரதம் மேற்கொண்டுதான் சபரிமலை யாத்திரையை ஆரம்பிக்க வேண்டும். துளசிமணி அல்லது உருத்திராட்சை மாலை 108 அல்லது 54 மணிகள் உள்ளதாகப் பார்த்து வாங்கி அத்துடன் ஐயப்பனின் திருவுருவ பதக்கம் ஒன்றினை இணைத்து மாலையணிய வேண்டும். மாலையும் கூட, தாமாக அணியக் கூடாது.
[சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும்.. ஆர்எஸ்எஸ் நிலைப்பாடு! ]

குருசாமி
பலமுறை முறையாக விரதம் இருந்து பெருவழிப் பாதையில் சென்று வந்த பக்தரை குரு சாமியாக ஏற்று திருவிளக்கு முன்பாகவோ, கோயில்களிலோ குருவை வணங்கி அவர் கரங்களால் மாலையணிந்து கொள்ள வேண்டும். மாலையணிந்து கொண்டவுடன் குருநாதருக்கு தங்களால் இயன்ற குரு தட்சணையை கொடுத்து, காலில் விழுந்து வணங்கி ஆசி பெற வேண்டும். ஐயப்பனாக மாலை அணிவிக்கப்பட்ட நேரத்திலிருந்து, குருசாமியை முழு மனதுடன் ஏற்று, அவர் சொல்வதை தேவவாக்காக கருதி, மனக்கட்டுப்பாட்டுடன், பணிந்து நடக்க வேண்டும். நீலம், கருப்பு அல்லது காவி இவற்றுள் ஏதாவது ஒரு நிறத்தில் உடைகள் அணிய வேண்டியது அவசியம்.

இருவேளை குளியல்
காலை, மாலை இருவேளைகளிலும் அதுவும் சூரிய உதயத்திற்கு முன்பும், சூரிய அஸ்தமனத்திற்கு பிறகும், குளிர்ந்த நீரில் தவறாமல் நீராடி ஐயப்பன் திருவுருவப் படத்தை வைத்து வணங்குதல் வேண்டும். தினமும் ஆலய வழிபாடு செய்ய வேண்டும், கூட்டுப் பஜனைகளிலும் கலந்து கொண்டு வாய் விட்டு ஐயப்பன் திருநாமத்தை சரண கோஷமாக சொல்ல வேண்டும்.

மனக்கட்டுப்பாடு அவசியம்
மனக்கட்டுப்பாடு, புகைபிடித்தல், மது அருந்துதல், அசைவ உணவு உட்கொள்ளுதல், சினிமா பார்ப்பது, உல்லாச பயணம் மேற்கொள்வதை விரத காலங்களில் தவிர்க்க வேண்டும். மனதாலும், வாக்காலும், செயலாலும் எந்த பெண்ணையும், நினைக்காமல், அணுகாமல், தீவிர பிரம்மச்சரிய விரதத்தை கடைபிடிக்க வேண்டும். ஐயப்பன் பிரம்மச்சாரி. மாலை அணிந்தவர்களும் ஐயப்பனாகவே கருதப்படுவதால், மாலை அணிந்தவர்கள் செய்யும் சிறு தவறும், பெரும் ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்பது பக்தர்கள் கருத்து. இதை நினைவுபடுத்ததான், மாலை அணிந்தவர்களை பிறர் சாமி என்றுதான் சொல்வார்கள். மலை தரித்தவர்கள் வேறு வீடுகளில் எக்காரணத்தைக்கொண்டும் உணவு உட்கொள்ளக்கூடாது.

கன்னி சாமிகள்
சபரிமலை யாத்திரை செல்வோர் போய் வருகிறேன் என குடும்பத்தாரிடம் கூறிவிட்டு விடைபெறக்கூடாது. அனைத்து பொறுப்பும் ஐயப்பனுக்கே உரித்தானது என்ற சரணாகதி எண்ணம் வர வேண்டும் என்பதே இதன் தாத்பர்யம். தீட்டு என கருதும் இடங்களுக்கு செல்ல கூடாது. கன்னி ஐயப்பன்மார்கள் யாத்திரை புறப்பட்ட திகதியிலிருந்து ஐயப்பன் சன்னிதானம் செல்லும்வரை அவர்களாக இருமுடியை தலையிலிருந்து இறக்கி வைக்கவோ, ஏற்றி வைக்கவோ கூடாது. குருநாதர் அல்லது ஏற்கனவே பல முறை ஐயப்பன் கோயில் சென்ற பழமலை ஐயப்பன்மார்களைக் கொண்டுதான் ஏற்றவோ, இறக்கவோ வேண்டும். இப்படியான பல நெறிமுறைகளை ஒழுங்காக கடைபிடிப்பவர்களுக்கு ஐயப்பன் அருள் அமோகமாக கிடைக்கும் என்பதே பக்தர்கள் நம்பிக்கை.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications