நம்பூதிரி... நர்ஸ்... கொலை செய்யும் நந்தினி... - பாம்பு கொன்றால் தண்டனை யாருக்கு பாஸ்?
சன்டிவி நந்தினி சீரியலில் நம்பூதிரியை கொன்று புதைத்த பாம்பு இப்போ நர்சை கொன்று பிணத்தை வீட்டு வாசலில் போட்டதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகும் நந்தினி சீரியல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. விஸ்வரூபம் எடுக்கும் நந்தினி பாம்பு, முதலில் நம்பூதிரி அடுத்து நர்ஸ் என இருவரை கொன்று பழி தீர்த்துள்ளது.
ராஜசேகர் குடும்பத்தை பழிவாங்க காத்திருந்த நந்தினி பாம்பு இப்போது கங்காவின் உடம்பிற்குள் புகுந்துள்ளது. இந்த பாம்பு இப்போது குழந்தை தேவயாணியையும், ராஜசேகர் மகன் அருணையும் கொல்ல நேரம் பார்த்துக்கொண்டுள்ளது.
ஜானகியின் ஆவி தேவயாணியின் உடம்பிற்குள் இருப்பதால் நந்தினி பாம்பிடம் இருந்து மகளையும், கணவனையும் காப்பாற்றி வருகிறது.

நம்பூதிரி
ராஜசேகர் குடும்பத்திற்கு பூஜை செய்ய வந்த நம்பூதிரிக்கு விபத்து ஏற்படுகிறது. நம்பூதிரியை கொல்ல நினைக்கும் நந்தினி, மருத்துவமனைக்கு சென்று கொலை செய்ய போடும் திட்டம் சிசிடிவி கேமராவில் பதிவாகிறது. அதை எடுத்து வைத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்டுகிறாள் நர்ஸ்.

நந்தினியின் கோபம்
நம்பூதிரி விபத்தில் சிக்கியதால் வீட்டில் துர்சம்பவங்கள் அரங்கேறுவதால் தனது நண்பரான ஒரு நம்பூதிரியை ராஜசேகர் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார். வந்த உடனேயே கங்காவின் உடலில் இருக்கும் பாம்பை கண்டு பிடிக்கவே அவரை கொன்று புதைக்கிறாள் நந்தினி.

மிரட்டும் நர்ஸ்
அமாவாசை நாளில் ஆக்ரோசத்துடன் தனது கணவர் அருணை கொலை செய்ய வந்த நந்தினியை நர்ஸ் லதா நேரில் வந்து மிரட்டுகிறாள். இதனால் விஸ்வரூபம் எடுத்த நந்தினி, நர்சை கொன்று புதைக்கிறாள். வீட்டு வாசலில் கிடந்த சடலத்தை வைத்து போலீஸ் கங்காவை விசாரிக்கிறது.

செல்போன் சிக்கியது
நர்ஸ் செல்போனில் கங்காவின் வீடியோ இருப்பதால் அதை போலீசில் கண்ணில் படாமல் தடுகிறாள் அம்மன் ரூபத்தில் இருக்கும் குஷ்பு. ஆனால் ஜானகியின் ஆவி நந்தினியை மாட்டிவிட துடிக்கிறது.

நம்பூதிரியின் சடலம்
வீட்டிற்குள் புதைக்கப்பட்ட நம்பூதிரியின் சடலத்தை அருணை வைத்தே தோண்டி எடுக்கிறாள் ஜானகி. ஏற்கனவே லதாவின் சடலத்தை பார்த்தே அதிர்ச்சியில் இருந்த ராஜசேகர் குடும்பத்தினர், நம்பூதிரியின் சடலத்தை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கின்றனர்.

தண்டனை யாருக்கு பாஸ்
பாம்பு பழிவாங்கி கொலைக்கு மேல் கொலையாக செய்து கொண்டு போகிறது. கங்காவின் உடலில் இருந்து பாம்பு வெளியேறி விட்டால் கங்காவை கைது செய்வார்களா? அல்லது தண்டனை யாருக்கு தருவார்கள் என்று கேட்கின்றனர் சீரியலை விடாமல் பார்க்கும் ரசிகர்கள்.

குஷ்பு வரட்டும்
இதுவரை அரூபமாகவே வந்து அவ்வப்போது வசனம் பேசி விட்டு சிரித்து விட்டு போகிறார் குஷ்பு. சீரியலில் முழு நேரமாக குஷ்பு வந்தால் சீரியலில் அனல் பறக்கும் என்கின்றனர் தயாரிப்பாளர்கள். பிளாஷ் பேக் காட்சிகள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications