வெளியானது ரகசியம்.. ஆங்கில பத்திரிகையை பார்க்க கமல் ஏன் சொன்னார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கமல் நேற்று இரவு ஒரு கவிதையை எழுதி டிவிட்டரில் ஷேர் செய்துவிட்டு புரியாதவர்கள் நாளை ஆங்கில பத்திரிகையை பார்க்க என கூறியிருந்தார்.

கமல் அரசியல் பிரவேசம் அல்லது தனி அமைப்பு தொடங்குவது குறித்த அறிவிப்பை ஆங்கில பத்திரிகைகளுக்கு மட்டும் சிறப்பு பேட்டியாக கூறியிருப்பாரோ என்ற எதிர்பார்ப்பில் தமிழகமே காத்திருந்தது.

What news appeared on Kamal Hassan in English news paper?

இதுவரை அவர் டிவிட்டரில் வேறு எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. எனவே கமல் எதைப்பற்றி கூறினார் என்பது புரியாமல் மண்டையை பிய்த்துக்கொண்டுள்ளனர் ரசிகர்கள்.

இடித்துரைப்போம் யாருமினி மன்னரில்லை
துடித்தெழுவோம் மனதளவில் உம்போல் யாம்
மன்னரில்லை
தோற்றிறந்தால் போராளி
முடிவெடுத்தால் யாம் முதல்வர்
அடிபணிவோர் அடிமையரோ?
முடிதுறந்தோர் தோற்றவரோ?
பேடா மூடா எனலாம் அது தவறு
தேடாப் பாதைகள் தென்படா
வாடா தோழன் என்னுடன்
மூடமை தவிர்க்க முனைவரே தலைவர்
அன்புடன்
நான்

என்று கமல் எழுதிய கவிதைக்கு ஒவ்வொருவரும் ஒரு பொழிப்புரை எழுதிக் கொண்டுள்ளனர். ஆனால், கமல் அரசியலுக்கு வருவதாக எந்த அறிவிப்பையும் ஆங்கில பத்திரிகைகள் வாயிலாக வெளியிடவில்லை. ஆனால், தமிழ் தலைவாஸ் கபடிக் குழுவின் பிராண்ட் அம்பாசிடராக நடிகர் கமல் ஹாஸன் நியமிக்கப்பட்டுள்ளார். என்ற செய்தி வெளியாகியுள்ளது.

பிரபல அரசியல் விமர்சகர் சுமந்த் ராமனும், கமல் இந்த விஷயத்தைதான் கவித்துவமாக சொல்லியிருக்க கூடும் என்று டிவிட்டரில் தெரிவித்துள்ளார். கமல் டிவிட்டர் பின்னூட்டத்தில் ஒரு நெட்டிசன் இக்கருத்தை கூறிய நிலையில், அதை சுமந்த் ராமனும் வழிமொழிந்துள்ளார். இப்போது கமல் கவிதையை படியுங்கள். அடிபணிவோர் அடிமையரோ என்றால், கபடியில் ரெய்டுக்கு செல்லும் வீரரை குனிந்து காலை பிடித்து அமுக்கும் எதிரணி வீரர்கள் அடிமையரோ? என்று கேட்பதை போல உள்ளதல்லவா?

Punish the culprits not the Lawyers says Kamal Hassan-Oneindia Tamil

கமல் அரசியல் ஆழம் பார்க்க ஏமாந்த தமிழர்களா கிடைத்தார்கள். ஐயோ பாவம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Do you know what news appeared on Kamal Hassan in English news paper? here is the matter.
Please Wait while comments are loading...