ஒத்த ரோசா.. ஆள்நடமாட்டம் இல்லை.. சரியாக மிஸ்டு கால் கொடுத்து காதலனை வரவைத்த மனைவி.. கணவன் படுகொலை
தென்காசி: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்தவரை அவரது மனைவி கொடுத்த மிஸ்டு காலின்பேரில் நடுகாட்டில் காத்திருந்து கொலை செய்ததாக கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வென்றிலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் வைரவசாமி மற்றும் முத்துமாரி தம்பதியர். கணவன் மனைவி இருவரும் வீரசிகாமணியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
இருவரும் ஒரே இடத்தில் பணிபுரிவதால் ஒரே இரு சக்கர வாகனத்தில் பணிபுரியும் இடத்திற்கு தினமும் சென்று வருவது வழக்கம். இந்நிலையில் இருவரும் கடந்த 19ஆம் தேதி பணி முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீரசிகாமணியில் இருந்து வென்றிலிங்கபுரத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.

காரில் வந்த மர்ம நபர்கள்
அப்போது அவ்வழியாக காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று வைரவசாமி - முத்துமாரி தம்பதியினரை வழி மறித்ததாக கூறப்படுகிறது. மேலும் காரில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் முத்துமாரி கழுத்தில் அணிந்திருந்த சுமார் 30 கிராம் நகைகளை பறித்ததாக கூறப்படுகிறது.

வைரவசாமி
அப்போது தடுக்க வந்த வைரவசாமியை அந்த கும்பல் சரமாரியாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார். இதையடுத்து கிழிந்த ஆடைகளுடன் கணவரின் சடலத்துக்கு அருகே முத்துமாரி அழுது கொண்டிருந்தார். இதையடுத்து அவ்வழியே போவோர் வருவோர் இது குறித்து சேர்ந்தமரம் போலீஸுக்கு புகார் அளித்தனர்.

போலீஸார் விசாரணை
புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் முத்துமாரியிடம் விசாரித்ததில், தன்னிடம் நகையை பறித்த கொள்ளையர்கள் தன்னிடம் அத்துமீற முயன்றதாகவும் அப்போது ஆள்நடமாட்டத்தை பார்த்த அந்த கொள்ளையர்கள் தன்னை அப்படியே விட்டு விட்டு ஓடியதாகவும் தெரிவித்தார். இதையடுத்து அவரிடம் மேலும் நடத்தப்பட்ட விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக கூறியதால் அவரிடம் கிடுக்கிபிடி விசாரணை மேற்கொண்டனர்.

கள்ளக்காதலனுடன் நாடகம்
அப்போதுதான் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்றுவிட்டு முத்துமாரி நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து முத்துமாரியை கைது செய்த போலீஸார் அவரது கள்ளக்காதலன் இசக்கிமுத்து, அவரது நண்பர்கள் காளிராஜ், அன்புராஜா ஆகியோரையும் கைது செய்தனர். அப்போது இசக்கி முத்துவிடம் விசாரணை நடத்தப்பட்டது.

6 ஆண்டு காதல்
இந்த விசாரணையில் இசக்கிமுத்து கூறுகையில் நானும் முத்துமாரியும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். ஆனால் முத்துமாரியின் பெற்றோர் கட்டாயப்படுத்தி வைரவசாமிக்கு திருமணம் செய்து வைத்தனர். எனினும் நாங்கள் இருவரும் பழக்கத்தை தொடர்ந்தோம். இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தோம்.

வைரவசாமிக்கு தெரிந்த கள்ளக்காதல்
இந்த விஷயம் வைரவசாமிக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் எங்கள் சந்திப்பிற்கு இடையூறாக இருந்தார். அவ்வப்போது முத்துமாரியை கண்டித்துக் கொண்டே இருந்தார். இதனால் முத்துமாரி என்னை சந்திக்க முடியாமல் தவித்தார். இதனால் வைரவசாமியை தீர்த்துக் கட்டிவிட்டால் பிரச்சினை தீர்ந்து விடும் என முத்துமாரியிடம் கூறினேன். அதற்கு அவரும் சம்மதித்தார்.

திட்டம் தீட்டிய முத்துமாரி
இதையடுத்து முத்துமாரியே எங்களுக்கு திட்டம் போட்டு கொடுத்தார். இருவரும் வேலை முடித்துக் கொண்டு இரவு நேரத்தில் தனியே வரும் போது தங்களை வழிமறித்து கொள்ளை நாடகத்தை அரங்கேற்றி தன் கணவரை கொன்றுவிடுமாறு கூறினார். அதன்படி எனது இரு நண்பர்களுடன் தயாராக இருந்தேன். அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தை அடைந்தவுடன் முத்துமாரி எனக்கு மிஸ்டுகால் கொடுத்தார்.

வைரவசாமி
இதையடுத்து நாங்கள் மூவரும் அங்கு சென்றோம். அப்போது வைரவசாமி என்னை தகாத வார்த்தைகளால் பேசினார். தன் மனைவியை மறந்துவிடும்படி கூறினார். இதனால் ஆத்திரமடைந்த நான் நண்பர்களுடன் சேர்ந்து கட்டையால் அவரது மண்டையில் ஓங்கி அடித்தேன். இதில் வைரவசாமி உயிரிழந்தார். உடனே முத்துமாரி தான் அணிந்திருந்த 30 கிராம் தங்க நகைகளை கழற்றி கொடுத்தார். அதை எடுத்துக் கொண்டு நாங்கள் தப்புவது போலவும் கொள்ளை நடந்தது போலும் செட் செய்து விட்டு தப்பினோம் என வாக்குமூலம் அளித்தார்.












Click it and Unblock the Notifications