பற்றிய நெருப்பு.. ஸ்டாலின் கிட்ட வர்றாரா "தலை" ?.. சிக்குதா திமிங்கலம்.. குறுக்கே எடப்பாடி பழனிசாமி
சென்னை: திமுக மற்றும் அதிமுக கூடாரங்களில் முக்கிய தகவல் ஒன்று பரபரத்து வருகிறது.. இது தமிழக அரசியல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்பையும் உருவாக்கி விட்டுள்ளது.
கடந்த வாரம் அமமுக பொதுச்செயலாளர் தினகரனை, ஓபிஎஸ் சந்தித்து பேசியுள்ளார்.. இத்தனை வருடமும், டிடிவி தினகரனின் மறைமுகமான ஆதரவை ஓபிஎஸ் பெற்று வந்த நிலையில், பழைய நண்பரை மீண்டும் சந்தித்து விட்டார் தினகரன்.
இந்த சந்திப்பின் பின்னணி காரணம் என்று பெரிதாக எதுவும் இருக்க வாய்ப்பில்லை.. ஒத்த கருத்துக்களை இருவருமே கொண்டிருக்கும் நிலையில், தென்மண்டல செல்வாக்குகள் இன்னும் வலுப்பெறும் என்று இரு தரப்பினராலும் நம்பப்பட்டு வருகிறது.

கோட்டை ஓட்டை: அதேசமயம், ஓபிஎஸ்ஸின் அரசியல் இப்போது எதை நோக்கி நகர்கிறது என்ற அடுத்தக்கட்ட கேள்வியும் எழுகிறது.. ஒற்றை தலைமை விவகாரம் தலைதூக்கியதில் இருந்தே ஓபிஎஸ்ஸூக்கு பெரும் ஆதரவாகவும், பலமாகவும் இருந்து வருவது மூத்த தலைவர் வைத்திலிங்கம்தான்.. அதனால்தான் வைத்திலிங்கத்தை இழுக்க எடப்பாடி தரப்பு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.. ஆனால், வைத்திலிங்கத்தின் விசுவாசத்தை கண்டு, எடப்பாடி தரப்பே மிரண்டு போய்விட்டதாம்.. ஒருகட்டத்தில் வைத்திலிங்கத்தை சீண்டாமல் ஒதுங்கியும் விட்டதாம்.
வைத்தியலிங்கம் : டெல்டாவை பொறுத்தவரை மூத்த தலைவர் வைத்திலிங்கத்தை தாண்டி, அதிமுகவில் வேறு யாரும் அந்தஅளவுக்கு பெரிதாக வளரவில்லை.. வைத்திலிங்கத்தின் கோட்டையாகவே டெல்டா விளங்குவதால்தான், எடப்பாடிக்கு டெல்டா இப்போதுகூட கலக்கத்தையே தந்து வருகிறது..
அதனால்தான், வைத்திலிங்கத்தின் செல்வாக்கை வீழ்த்தி, அந்த இடத்துக்கு மாஜி அமைச்சர் காமராஜை கொண்டுவர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கிறாராம்.. இதற்காகவே, வைத்திலிங்கத்தின் கோட்டைக்குள்ளேயே நுழைந்து, காமராஜ் மகன் திருமண விழாவிலும் கலந்து கொண்டு பேசிய எடப்பாடி பழனிசாமி, "எவனாலும் அதிமுகவை தொட முடியாது" என்று சீறியது வைத்திலிங்கம் தரப்பை பார்த்துதானாம்.

ஒரத்தநாடு: இதையடுத்துதான், ஒரத்தநாட்டில் டிடிவியின் வலதுகரமாக இருந்த அமமுக மாவட்டச் செயலாளர் சேகரையும் அதிமுகவுக்குள் கொண்டு வந்தார் காமராஜர். இப்படி டெல்டாவுக்கு ஏற்கனவே குறி வைத்து காய்நகர்த்தி வரும்சூழலில், லட்டுபோல ஒரு சான்ஸ் எடப்பாடிக்கு கிடைத்துள்ளதாம்..
அதாவது, மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை தன்னுடன் அழைத்து சென்று, தினகரனுடனான சந்திப்பை ஓபிஎஸ் நடத்தியிருந்தார்.. வைத்தியலிங்கம், ஜேசிடி.பிரபாகரன், மனோஜ் பாண்டியன் போன்ற முக்கிய நிர்வாகிகள் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை.. இத்தனை நாளும் கூடவே இருந்த வைத்திலிங்கத்தை, ஏன் ஓபிஎஸ் தவிர்த்தார்? ஒருவேளை, ஓபிஎஸ் மீது இவர்கள் அதிருப்தியில் இருக்கிறார்களா? அல்லது எதேச்சையாக நடந்த சந்திப்பா? என்றெல்லாம் சந்தேகங்கள் வலம்வந்தன.
பண்ருட்டி ராமச்சந்திரன்: அதற்குள் திடீரென ஒரு குண்டை தூக்கி போட்டார் ஜெயக்குமார். " டிடிவி.தினகரனை நேரில் சென்று சந்தித்த விவகாரத்தில் ஓபிஎஸ் மீது அவருடன் இருக்கும் ஒரு சிலரே அதிருப்தியில் இருக்கிறார்கள்" என்று போகிற போக்கில் பஞ்ச் வைத்துவிட்டு போனார்.. ஆக, வைத்திலிங்கம் விஷயத்தை அதிமுக மோப்பம் பிடித்துவிட்ட நிலையில் அது தொடர்பான சலசலப்புகள் இணையத்தில் தற்போது வலம் வந்து கொண்டிருக்கின்றன.
அதாவது, ஓபிஎஸ் - தினகரன் சந்திப்பை வைத்திலிங்கம் அவ்வளவாய் ரசிக்கவில்லையாம்... இதை பற்றி தன்னுடைய ஆதரவாளர்களிடம் புலம்பி கொண்டிருக்கிறாராம்.. "இந்த சந்திப்பு ஓபிஎஸ்ஸூக்கு வேண்டுமானால் பலன் தரலாம், இதனால் எனக்கு எந்த பலனும் இல்லை என்று சொல்கிறாராம்.. அத்துடன், அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனையிலும் மூழ்கி உள்ளதாக சொல்கிறார்கள்.. இந்த புலம்பல் அதிமுக மற்றும் திமுக தரப்பில் எதிரொலித்துள்ளதாம்..
சிக்னல்கள்: இப்போது இரு தரப்பிலிருந்துமே, போட்டி போட்டுக்கொண்டு சிக்னல் தந்து கொண்டிருக்கிறார்களாம்.. அதிலும் அதிமுக படுதீவிரமாகி கொண்டிருக்கிறது.. இத்தனை நாளும் வலையை விரித்தும், வைத்திலிங்கம் வராத சூழலில், ஓபிஎஸ்ஸை இனியும் நம்ப தேவையில்லை.. இப்படித்தான் கழட்டிவிட்டு போய்விடுவார்.. அதிமுகவில் முன்பு என்ன செல்வாக்கோடு இருந்தாரோ அதே செல்வாக்கை மீண்டும் பெறலாம்.. உடனடியாக வந்து எடப்பாடியாரை சந்திக்க சொல்லுங்கள்" என்று தூது நடக்கிறதாம்.

இதே வேகத்துடன்தான் திமுகவும் காய்நகர்த்துகிறதாம்.. காரணம், இப்போதைக்கு தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் போன்றோர்களுக்கு அமைச்சர் பதவி தந்து முன்னுரிமை தரப்பட்டாலும், டெல்டா புள்ளியான வைத்திலிங்கத்தை தங்கள் பக்கம் இழுக்க திமுகவும் முயற்சிப்பதாக சில நாட்களுக்கு முன்பே செய்திகள் பரவின... ஆனால், ஓபிஎஸ் மீது வைத்திலிங்கம் வைத்திருந்த, விசுவாசத்தை பார்த்து, அதிமுகவை போலவே திமுகவும் மிரண்டு போனதாம்.. எனவே, தற்போது, மீண்டும் தூண்டில் போடுவதாக சொல்கிறார்கள்.
அவசரம் - அவசரம்: மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்களை அமைச்சர்களாக உட்காரவைத்து அழகுபார்ப்பது திமுக மேலிடத்தின் குணம்.. அதனால், உடனடியாக எதையும் யோசிக்காமல் திமுகவுக்கு வந்துவிட சொல்லுங்கள் என்று அங்கேயும் தூது நடக்கிறதாம்.. ஆக, திமுக, அதிமுக என 2 பேருமே அவசரப்படுத்தியும், நெருக்கியும் வருவதால், வைத்திலிங்கம் என்ன செய்வார் என்று தெரியவில்லை.. இத்தனை காலமும், "பாலமாகவும் - பலமாகவும்" இருந்த வைத்திலிங்கம் விவகாரத்தில் ஓபிஎஸ் என்ன செய்ய போகிறார் என்றும் தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

இப்படி ஏகப்பட்ட யூகங்கள் வலம்வந்து கொண்டிருக்கும் நிலையில், தஞ்சையில் இன்று வைத்திலிங்கம் தந்த பேட்டியானது, அனைத்தையும் நொறுக்கி தள்ளி உள்ளது.
"கடந்த 3 நாட்களுக்கு முன்பு முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொது செயலாளர் தினகரனை சந்தித்து பேசி இணைந்து செயல்படுவதாக அறிவித்தார். இந்த சந்திப்பின் போது மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனும் சென்றிருந்தார். ஆனால் நான், பிரபாகரன், மனோஜ்பாண்டியன் ஆகியோர் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் சந்திப்பதால் செல்லவில்லை.
ஓ.பன்னீர்செல்வத்தின் விருப்பமே பிரிந்து இருக்கும் அனைவரும் ஒன்றிணைந்து ஒன்றுப்பட்ட அதிமுகவை உருவாக்க வேண்டும் என்பது தான். இதுதான் உண்மையான தொண்டர்களின் எதிர்பார்ப்பாகும். அதற்காக தான் அவர் பாடுபட்டு வருகிறார். மேலும் தினகரனை சந்தித்து இணைந்து செயல்படுவதாக அறிவித்தார்.
விரைவில் சசிகலாவையும் சந்திக்க உள்ளார். அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்தால் தான் 2026-ல்அதிமுக ஆட்சி மலரும். அதற்காக தான் ஓபிஎஸ் பாடுபட்டு வருகிறார். திருச்சி மாநாட்டை போல் விரைவில் கொங்கு மண்டலத்தில் பிரமாண்ட மாநாடு நடத்தப்படும். அதில் சசிகலா பங்கேற்க ஓபிஎஸ் அழைப்பு விடுப்பார்" என்று கூறியிருக்கிறார். வைத்திலிங்கத்தின் இந்த பேட்டியானது, வலம்வந்து கொண்டிருந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகவும் பார்க்கப்பட்டு வருகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications