வாக்குப்பெட்டியில் எந்த வேட்பாளருக்கு எத்தனையாவது இடம்?
ஆர்கே நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு பெட்டியில் எந்தெந்த வேட்பாளருக்கு எத்தனையாவது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது தெரியுமா?
சென்னை : பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. வாக்குப்பெட்டியில் எந்தெந்த வேட்பாளருக்கு எந்தெந்த இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது தெரியுமா.
இந்த முறையாவது இடைத்தேர்தல் நடக்குமா நடக்காதா என்ற எதிர்பார்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆர்கே நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. பணப்பட்டுவாடா புகார், ஜெயலலிதா வீடியோ வெளியீடு என்று எழுந்த பிரச்னைகளால் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற குரல் எழுந்தது.

எனினும் இந்த தேர்தலுக்காக 5 மடங்கு அதிக செலவு செய்துள்ள தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தி முடித்துவிடும் உறுதியோடு நின்று தேர்தல் நடத்தி வருகிறது. 2.28 லட்சம் வாக்காளர்களின் வாக்குகளை பதிவு செய்வதற்காக 258 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன.
இவை அனைத்துமே பதற்றமான வாக்குச்சாவடிகள் என்று கண்டறியப்பட்டுள்ளன. வாக்குப் பெட்டியில் முதல் வேட்பாளராக பகுஜன் சமாஜ் கட்சியின் சத்தியமூர்த்தியும், இரண்டாவதாக பாஜகவின் கரு. நாகராஜனும் இடம்பெற்றுள்ளனர்.

மூன்றாவதாக அதிமுகவின் மதுசூதனன், 4வதாக திமுகவின் மருதுகணேஷின் பெயரும் இடம்பெற்றுள்ளது. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கலைக்கோட்டுதயத்திற்கு 6வது இடமும், தொப்பி சின்னம் பெற்ற நமது கொங்கு முன்னேற்ற கழக வேட்பாளர் ரமேஷிற்கு 10வது இடமும் தரப்பட்டுள்ளது.
மொத்தம் 59 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஆர்கே நகரில் 3 வாக்குப்பெட்டி இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு வாக்குப்பெட்டிக்கு 16 வேட்பாளர்கள் வீதம் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தப்பட்டுள்ளது. குக்கர் சின்னத்தில் போட்டியிடும் தினகரனுக்கு 3வது வாக்குப்பெட்டியில் முதல் இடம் தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications