புதிய கொறடாவை நியமிக்கவே இல்லை... அதிமுக எம்.எல்.ஏக்கள் அஞ்ச வேண்டாம்: மாஃபா பாண்டியராஜன்
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் புதிய அரசுதான் பதவியேற்றுள்ளது; புதிய கொறடா நியமிக்கப்படவில்லை; ஆகையால் எம்.எல்.ஏக்கள் அச்சப்பட வேண்டாம் என ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை: எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான புதிய அரசில் இன்னமும் கொறடா நியமிக்கப்படவில்லை; ஆகையால் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கொறடா உத்தரவு குறித்து அச்சப்பட வேண்டாம் என ஓபிஎஸ் அணியின் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் கொள்கைக்கும், குறிக்கோளுக்கும், கோட்பாடுகளுக்கும் எதிராகவும் முரணாகவும் செயல்பட்டதால் சசிகலா அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மதுசூதனன் அறிவித்துள்ளார்.

மேலும் அதிமுக கொறடா எஸ்.ராஜேந்திரன், திண்டுக்கல் சீனிவாசன், வி.பி.கலைராஜன், டாக்டர் விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, தங்கத் தமிழ்செல்வன் உள்ளிட்ட 13 பேர் நீக்கப்படுவதாகவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாஃபா பாண்டியராஜன், அதிமுக கொறடா ராஜேந்திரன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு விட்டார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சரவை இன்னமும் கொறடா என்று யாரையும் நியமிக்கவில்லை.
ஆகையால் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கொறடா உத்தரவு குறித்து அச்சப்பட வேண்டாம். கொறடா உத்தரவு அதிமுக எம்எல்ஏக்களை கட்டுப்படுத்தாது. கொறடா இல்லாததால் எம்எல்ஏக்கள் யாருக்கும் அச்சப்பட தேவையில்லை. எம்.எல்.ஏக்கள் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications