For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அப்போ சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் இல்லையா? தேர்தல் ஆணைய பட்டியலால் அம்பலம்

சசிகலாதான் அதிமுகவின் பொதுச்செயலாளர் என்ற முறையில் உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். ஆனால், அந்த நியமனம் செல்லாது என்று, பன்னீர்செல்வம் தரப்பு தேர்தல் ஆணையத்தில் மனு செய்துள்ளது.

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் என்று சசிகலாவை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள ஒரு பட்டியல் மூலம் இது அம்பலமாகியுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம், வரும் 12ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளது. அந்த கூட்டத்தில் தேர்தல் சீர்திருத்தம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதான புகார்கள் குறித்தெல்லாம் ஆலோசிக்கப்பட உள்ளது.

Who is AIADMK's General Secretary? Even the Election Commission doesn't know

இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கும், தேர்தல் ஆணையம் அழைப்புவிடுத்துள்ளது.

இந்த பட்டியலில், அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் என்ற இடத்தில், பெயர் குறிப்பிடப்படவில்லை. கட்சியியலிருந்து தகவல் வர வேண்டியுள்ளது என்ற வார்த்தையை அந்த இடத்தில் பயன்படுத்தியுள்ளது தேர்தல் ஆணையம்.

சசிகலாதான் அதிமுகவின் பொதுச்செயலாளர் என்ற முறையில் உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். ஆனால், அந்த நியமனம் செல்லாது என்று, பன்னீர்செல்வம் தரப்பு தேர்தல் ஆணையத்தில் மனு செய்துள்ளது. இரு தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில், தேர்தல் ஆணையம், அதிமுகவின் பொதுச்செயலாளர் யார் என்ற தகவலை வெளியிடவில்லை.

தேர்தல் ஆணையத்தின் இந்த பட்டியல், சசிகலா ஆதரவாளர்கள் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.

English summary
Even the election commission does not seem to know who the chief of the AIADMK is. The election commission released a list of recognised state political parties and their leaders who would take part in an all-party meet scheduled to take place on May 12. While the names of leaders of all parties have been mentioned, no name has been mentioned for the AIADMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X