"அம்மா"வின் அதிரடி நேர்காணலில் பங்கேற்ற அந்த ஐந்து பேர்.... இதோ இவர்கள்தான்!!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அதிரடியாக நடத்திய வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற ஐந்து பேரின் புகைப்படங்களை அதிமுக தலைமை நேற்று வெளியிட்டது. அதில் இடம் பெற்றிருந்த ஐந்து பேர் யார் என்ற விவரம் தெரிய வந்துள்ளது.
அதிமுக சார்பில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மனு செய்திருந்த நிலையில் அவர்களுக்கான நேர்காணல் தொடர்பாக எந்த செய்தியும் இதுவரை வெளி வராமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று அதிரடியாக நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது அதிமுக தலைமைக் கழகம்.

நேர்காணல் நடந்தது
அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தமிழகம், புதுச்சேரி, கேரளாவுக்கான நேர்காணல் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நடந்ததாக அதில் கூறப்பட்டிருந்தது.

ஐவர் அணி மிஸ்ஸிங்
மேலும் இதுதொடர்பாக புகைப்படம் ஒன்றும் வெளியானது. அதில் முதல்வர் ஜெயலலிதா நேர்காணல் செய்வது போல உள்ளது. ஆனால் அந்தப் படத்தில் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட ஐவர் அணியினர் யாரும் இல்லை.

யார் யார்
மேலும் இந்த புகைப்படத்தில் ஐந்து வேட்பாளர் விண்ணப்பதாரர்களின் புகைப்படம் இணைக்கப்பட்டிருந்தது. அவர்கள் யார் என்று அறிவதில் பலரும் ஆர்வம் காட்டினர்.

வெற்றிவேல்
தற்போது இந்த விவரம் தெரிய வந்துள்ளது. இடமிருந்து முதலில் இருப்பவர் வெற்றிவேல். இவர்தான் ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்து வந்தார்.

சிட்லபாக்கம் ராஜேந்திரன்
இடமிருந்து 2வது இருப்பவர் சிட்லபாக்கம் ராஜேந்திரன். காஞ்சிபுரம் கிழக்கு மத்திய மாவட்ட செயலாளர். சமீபத்தில் டி.கே.எம் சின்னையா நீக்கப்பட்டபோது அவரது பொறுப்பை இவருக்குத்தான் ஜெயலலிதா கொடுத்தார். இவர் தற்போது எம்.பியாக உள்ளார். கடந்த 2014ல் கோப்ராபோஸ்ட் நடத்திய ஆபரேஷன் பால்கன் கிளா ஸ்டிங் ஆபரேஷனில் சிக்கியவர் இவர்.

நூர்ஜகான்
இடமிருந்து 3வது இடத்தில் இருப்பவர் நூர்ஜகான். கட்சியின் தலைமைக் கழக பேச்சாளர். அனல் பறக்கப் பேசக் கூடியவர்.

பெஞ்சமின்
இடமிருந்து 4வதாக இருப்பவர். சென்னை மாநகராட்சியின் துணை மேயராக இருப்பவர் பெஞ்சமின்.

மனோரஞ்சிதம்
ஜெயலலிதா முன்பு அமர்ந்திருப்பவர் இவர். இவர் ஊத்தரங்கரை எம்.எல்.ஏவாக தற்போது இருப்பவர்.

5 பேருக்கும் சீட் உறுதி?
இந்த ஐந்து பேருக்கும் சீட் உறுதி என்றும் ஒரு பேச்சு அடிபடுகிறது. எனவேதான் இவர்களது படங்களை முதல்வர் ஜெயலலிதா முதலில் வெளியிட வைத்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

அது என்ன 5?
முதல்வர் ஜெயலலிதாவின் தற்போதைய ராசி எண் 5 ஆகும். எனவேதான் 5 பேர் கொண்ட வேட்பாளர் நேர்காணல் படத்தை அவர் வெளியிட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள்.

மதம் -ஜாதிக்கு முக்கியத்துவம்
முதல் நாள் நேர்காணலில் இந்து (சிட்லபாக்கம் ராஜேந்திரன், வெற்றிவேல், மனோரஞ்சிதம்), கிறிஸ்தவர் (பெஞ்சமின்), முஸ்லீம் (நூர்ஜகான்) என மூன்று மதத்தினரும் இடம் பெறுவது போல அழைத்துள்ளார் ஜெயலலிதா. மேலும் ஜாதி ரீதியாக பார்த்தால், தலித், யாதவர், முதலியார் என வேறு வேறு ஜாதியினரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

நாளை முதல் வேட்பாளர் பட்டியல்?
இன்று சிவராத்திரி. நல்லநாள். அதேபோல நாளை அமாவாசை. இந்துக்களுக்கு மிகச் சிறந்த நாள். எனவே நாளை, கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா வெளியிடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications