சந்தைக்கு வந்த ஆன்மீகக் குதிரை.. சவாரிக்கு காத்திருக்கும் கட்சிகள்.. கலகலக்கப் போகும் காட்சிகள்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ரஜனியின் க்ரீன் சிக்னலுக்காக காத்துக்கிடக்கும் நடிகை- வீடியோ

  சென்னை: தமிழகத்தைப் பொறுத்தவரை சுயமாக நின்று வென்று சாதிக்கக் கூடிய கட்சிகளை விரல் விட்டு எண்ணி விடலாம். வெளிப்படையாக சொல்வதானால் திமுக மற்றும் அதிமுக மட்டுமே. மற்ற கட்சிகள் எல்லாமே இந்த இரண்டில் ஒன்றுடன் கூட்டணி வைத்து ஓசி சவாரி செய்து ஒப்பேற்றி வரும் கட்சிகள்தான்.

  இதுவரை திராவிடக் குதிரைகள் மீது மட்டுமே ஏறி பயணப்பட்டு வந்த கட்சிகளுக்கு தற்போது புதிதாக ஒரு ஆன்மீகக் குதிரை வந்துள்ளது. அதுதான் ரஜினி. இனி ரஜினியும் அவரது கட்சியும், குட்டிக் கட்சிகளுக்கு உற்ற துணையாக, மாறக் கூடிய வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

  அதேசமயம், திராவிட ஆதரவு கட்சிகள் திமுக பக்கமும், திராவிட எதிர்ப்புக் கட்சிகள் ரஜினி பக்கமும் அணி திரளக் கூடிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன. ஆனால் இதை ரஜினி எப்படிக் கையாளுவார் என்பதும் எதிர்பார்ப்புக்குரியதாக மாறியுள்ளது.

  அதிமுக இனியும் இல்லை

  அதிமுக இனியும் இல்லை

  அதிமுக கிட்டத்தட்ட முடிந்து போன கதையாகி விட்டது. இனிமேலும் அது ஒரு சக்தியாக இருக்கும் என்று கூறுவதற்கில்லை. அதேசமயம், அது பாஜகவின் கட்டுப்பாட்டுக்குள் போய் விட்டதும் அனைவரும் அறிந்ததே. எனவே காங்கிரஸோ, இடதுசாரிகளோ அதிமுகவுடன் கூட்டணிக்கு போகும் என்பதற்கான வாய்ப்பே இல்லை.

  கருணாநிதி இல்லாத திமுக

  கருணாநிதி இல்லாத திமுக

  மறுபக்கம் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக எப்போதும் போல ஒரு சக்தியாக களத்தில் இருக்கிறது. ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் முடிவை மட்டும் வைத்து திமுக பலவீனமாகி விட்டதாக கருத முடியாது. எனவே திமுக எப்போதும் போலவே இருக்கிறது என்றே எடுத்துக் கொள்ளலாம்.

  புதிய சக்தி ரஜினி

  புதிய சக்தி ரஜினி

  இந்த நிலையில் கிட்டத்தட்ட அதிமுகவின் இடத்தை ரஜினி பிடிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதாவது அதிமுகவுக்கு வலுவான தலைமை கிடைக்காமல் போனால், அது அழியும் நிலை ஏற்பட்டால் அதன் இடத்தில் ரஜினி வந்து உட்காருவார். இதைத்தான் பிற குட்டிக் கட்சிகளும் தற்போது விரும்புகிறார்கள்.

  திமுக இல்லாவிட்டால் ரஜினி

  திமுக இல்லாவிட்டால் ரஜினி

  ஒன்று திமுகவுடன் கூட்டணி அல்லது ரஜினியுடன் கூட்டணி என்ற சூழலை தமிழக அரசியல் களம் சந்திக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதில் திராவிட சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் திமுக பக்கம் வருவார்கள். பாஜக ஆதரவு நிலைப்பாடு கொண்டவர்கள் ரஜினி பக்கம் போக வாய்ப்புள்ளது. அதாவது மறைமுகமான மதவாத கூட்டணியாக ரஜினி காந்த்தின் கூட்டணி எதிர்காலத்தில் அமையக் கூடும். அப்படித்தான் சூழல் உருவாகும்.

  பாமக - நாம் தமிழர்

  பாமக - நாம் தமிழர்

  கூட்டணியால் மட்டுமே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் கட்சிகள் போக பாமக, நாம் தமிழர் போன்ற தனித்து இயங்கும் மனோபாவம் கொண்ட கட்சிகள் என்ன மாதிரியான நிலைப்பாட்டை எடுக்கும் என்பது இப்போது தெளிவாகத் தெரியவில்லை. இவர்கள் தங்களுக்குள் கூட்டணி அமைப்பார்களா அல்லது வேறு என்ன மாதிரியான முடிவை எடுப்பார்கள் என்பது சுவாரஸ்யமான எதிர்பார்ப்புக்குரியதாகும்.

  அணி திரளும் தமிழ் தேசியம்

  அணி திரளும் தமிழ் தேசியம்

  மேலும் ரஜினிக்கு எதிராக தமிழ் தேசியவாதிகள் அணி திரளக் கூடிய வாய்ப்புகளும் உள்ளன. இவர்கள் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக நிற்கலாம். எனவே இவர்களின் சக்திக்கு எந்த அளவுக்கு ஆதரவு கிடைக்கும் என்பதும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Who will join Rajini's new alliance? What will be the stand of Smaller parties? How ADMK face the challanged posed by the new party? These are the milllion dollor questions. Here is a round up.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற