பரந்து விரிந்த பயிற்சி மையங்கள்.. இனி சங்கர் ஐஏஎஸ் அகாடமியை நடத்தப்போவது யார்?
Recommended Video

சென்னை: இந்தியாவின் முன்னணி ஐஏஎஸ் அகாடமி பயிற்சியாளரான சங்கர், தற்கொலை செய்த நிலையில், அடுத்ததாக அந்த அகாடமியை யார் நடத்துவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
2004ம் ஆண்டு, சங்கர் ஐஏஎஸ் அகாடமியை உருவாக்கிய சங்கர் நேற்று இரவு சென்னையிலுள்ள தனது இல்லத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுவரை, 900த்திற்கும் மேற்பட்ட சிவில் சர்வீஸ் பணியாளர்களை உருவாக்கியுள்ளார் சங்கர்.
[சுமார் 1000 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை உருவாக்கிய சங்கர் தற்கொலையா? நம்ப முடியவில்லையே]

பல இடங்களில் பயிற்சி மையம்
அண்ணாநகர் சாந்தி காலனியில் 3 தளங்கள் கொண்ட பெரிய அகாடமி ஒன்றை சங்கர் துவங்கினார். ஐஏஎஸ் அகாடமி மட்டுமின்றி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு பயிற்சி அளிக்க, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட நகரங்களில் மையங்கள் உள்ளன. இந்த பயிற்சி மையங்களை இனி யார் நடத்தும் பொறுப்பை ஏற்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தனி ஒருவர்
தனி ஒரு நபராகத்தான், ஐஏஎஸ் அகாடமியை சங்கர் உருவாக்கினார். அவருடைய மனைவி ஐஐடியில் படித்தவர். அங்கு பேக்கல்டியாக பணிபுரிந்து வருகிறார். அவர் சிறந்த கல்வியாளர் என்பதால், ஒருவேளை அகாடமியை மனைவியே நடத்த கூடும் என்று கூறப்படுகிறது. நேற்று இரவு சங்கர் தற்கொலை செய்த நிலையில், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், சங்கர் உடல் வைக்கப்பட்டுள்ளது. அவரது நல்லடக்கத்தில் பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்து யார் வழிநடத்தல்
இதன்பிறகுதான், சங்கர் அகாடமியை இனி யார் வழிநடத்துவார்கள் என்பது தீர்மானிக்கப்படும். சங்கருக்கு மனைவி மட்டுமின்றி 2 மகள்களும் உள்ளனர். அவர் சகோதரி, ஒடிசாவில், ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். எனவே அடுத்தகட்ட நடவடிக்கை எப்படி இருக்கும் என்பது கணிக்க முடியாததாக உள்ளது.

டெல்லி போக வேண்டாம்
ஐஏஎஸ் பயிற்சிக்கு டெல்லிக்குதான் செல்ல வேண்டும் என்ற நிலையை மாற்றி, சென்னை நோக்கி வர வைத்தது சங்கர் ஐஏஎஸ் அகாடமி. 27 நாடுகளில் வெளியுறவு அமைச்சக அதிகாரிகளாக பணியாற்றுவோர், சங்கர் அகாடமியில் படித்தவர்கள். இதுபோன்ற மிக பிரபலமான ஒரு அமைப்பை யார் இனி வழிநடத்துவார்கள் என்ற ஏக்கம் மாணவ சமூகத்தில் ஏற்பட்டுள்ளது.
-
சென்னை மக்கள் பொறுமை இழந்தனர்.. கட்டி முடிச்சு 4 மாசமாச்சு.. எப்ப தான் திறப்பீங்க! -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
நடிகர் ரவி மோகனுக்கு பின்னடைவு! ஆர்த்திக்கு ஜீவனாம்சம் வழங்கும் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி! -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications