Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அந்த" ஒரு லெட்டர்.. பிடிஆர் விவகாரத்தை கையில் எடுத்த எடப்பாடி.. ஆடியோவை வைத்து அதிமுக ஆடும் கேம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ தொடர்பாக அதிமுக தரப்பு புகார் அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ என்று ஒரு ஆடியோ வைரலாகி வருகிறது. திமுகவினர் மீதே குற்றச்சாட்டு வைக்கும் விதமாக ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது.

இந்த ஆடியோவில் உண்மைத்தண்மை அறியப்படவில்லை. இந்த நிலையில் நேற்று இன்னொரு ஆடியோவும் வெளியாகி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த இரண்டு ஆடியோக்களின் உண்மைத்தன்மை தெரியவில்லை. அமைச்சர் பிடிஆர் இந்த ஆடியோ ஜோடிக்கப்பட்டது, பொய்யானது என்று குறிப்பிட்டு இருந்தார்.

Why and How does Edappadi Palanisamy is focusing on the PTR Palanivel Thigarajan Audio issue?

ஆடியோ விவகாரம்:இந்த நிலையில்தான் நேற்று அதிமுக (எடப்பாடி) வழக்கறிஞர் பாபுமுருகவேல், தமிழ்நாடு மற்றும் மத்திய விஜிலென்சான சிபிஐ , அமலாக்கத்துறை உள்ளிட்ட துறைகளுக்கு நேற்று ஒரு புகார் கடிதம் அனுப்பியிருக்கிறார்.

அந்த கடித்ததில், அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாகவும், அந்த குரல் பதிவில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர் பெருமளவில் பணம் சேர்த்து விட்டதாகவும் கூறப்பட்ட ஆடியோவை பற்றி விலாவரியாக குற்றச்சாட்டுகளோடு குறிப்பிட்டு இருக்கிறாராம்.

மேலும் அந்த கடிதத்தில், பிடிஆரின் குரல் பதிவின் தொடர்ச்சியாக இருப்பதைப் போல மேலும் ஒரு குரல் பதிவு சமூக வலைத்தளங்களில் நேற்றில் இருந்து பெருவாரியாக பகிரப்பட்டு வருகிறது. அதில் குற்றம் சுமத்தப்படும் நபர் ஒரு தமிழ்நாட்டினுடைய அமைச்சர், குற்றத்தை சொல்பவரும் தமிழ்நாட்டினுடைய அரசாங்கத்தினுடைய ஒரு அமைச்சர்.

எனவே இதனுடைய உண்மை தன்மையை கண்டறிந்து இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் தெரிவித்திருக்கிறார்.

Why and How does Edappadi Palanisamy is focusing on the PTR Palanivel Thigarajan Audio issue?

இதே புகார் மனுவை கவர்னரை சந்தித்து தரப்போவதாக ஏற்கனவே எடப்பாடி சொல்லியிருப்பது கவனிக்கத்தக்கது.

எடப்பாடி கோபம்:முன்னதாக, ஆடியோ குறித்து எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார். அதில் பிடிஆர் புகைப்படம் உள்ள ஆடியோ ஒன்றை ஒலிபரப்பி, இதோ இந்த ஆடியோவை.. இதை கேட்டுவிட்டு சொல்லுங்கள்.. இதை புனையப்பட்டதா.. உண்மையானதா.. போலியானதா என்பதை சொல்லுங்கள். இவரே பேசிவிட்டு.. இவரே பொய் என்று எப்படி சொல்ல முடியும். இதை ஆய்வு செய்ய வேண்டும்.

30 ஆயிரம் கோடி ரூபாய் என்பது சாதாரண விஷயம் இல்லை. நிதி அமைச்சரே இதை சொல்லி இருக்கிறார். இதை காட்டுத்தீ போல பரப்பிக்கொண்டு இருக்கிறது.

ஊடகங்கள் இதை பற்றி பேச வேண்டும். எங்களுக்கு பெரிய சந்தேகமே அவர் பேசியதுதான். இதற்கு முன் வலைத்தளங்களில் நிறைய வந்து இருக்கிறது. அவரின் அறிக்கைக்கு பின் இது பெரிய சந்தேகம் அளிக்கிறது.

இது அவரின் குரல்தான். இதை கேட்டால் யார் வேண்டுமானாலும் எளிதாக சொல்ல முடியும். இது அவருடைய குரல்தான். மதுரைக்காரர்களுக்கு தெரியும்.

30 ஆயிரம் கோடி பணம். இதை எங்கே வைப்பது.. என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் குடும்பம் தடுமாறிக்கொண்டு இருக்கிறது.

இதை எல்லாம் பார்ப்போம். இதை பற்றி புகார் கொடுப்போம். போலியானதா உண்மையானதா என்று விசாரிக்க வேண்டும். நிதி அமைச்சரே பேசி இருக்கிறார்.

நிதி அமைச்சர் பேசுவது சாதாரண விஷயம் கிடையாது. முன்னாள் அமைச்சர்கள் மீது எப்படி எல்லாம் புகார் வைத்தனர். அதில் எதிலும் உண்மை இல்லை. ஆதாரம் இல்லை. அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ விவகாரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

இது குறித்து ஆளுநரிடம் முறையிடுவோம். 2 வருடத்தில் இவர்கள் பெரிதாக கொள்ளையடித்துவிட்டனர். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டிய பணத்தை எல்லாம் கொள்ளையடித்துவிட்டனர்.

பிடிஆர் சொன்னதன் உண்மை தன்மையை ஆராய வேண்டும். நீங்கள் நியாயமானவர் என்றால் அதை பற்றி விசாரிக்க வேண்டும். நீங்கள் உண்மையானவர்கள் என்றால் விசாரியுங்கள். இதை பற்றி விசாரிக்க மத்திய அரசிடம் வலியுறுத்துவோம், என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

பிடிஆர் விளக்கம்:முன்னதாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சர்ச்சை ஆடியோ குறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்த விளக்கத்தில், என்னை பொது சமூகத்தில் வில்லன் போல் சித்தரிக்கிறார்கள். அவர்கள் தங்களின் தோற்றத்தை மாற்றிக்கொள்ள விரும்புகிறார்கள்.

என்னை இந்த அரசுக்கு எதிரான ஒரு தனிப்பட்ட போராளி போல் அவர்கள் சித்தரிக்க காட்டிக்கொள்ள முயற்சி செய்கிறார்கள். நான் இந்த பொது வாழ்க்கையில் என்ன செய்தேனோ அதெல்லாம் என் தலைவர்.. திமுக தலைவர்.. முதல்வர் ஸ்டாலின் காரணமாக மட்டுமே. எங்களை பிரிக்க நடக்கும் சதிகள் எதுவும் வெற்றிபெறாது.

இதனால் இந்த ஆடியோவிற்கு விளக்கம் அளிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறேன். இந்த தவறான, பொய்யான வீடியோவை அரசியல் தொடர்பற்ற சிலரும், ஊடகங்களும் விவாதித்து வருகின்றன. தற்போது பரவி வரும் ஆடியோ முழுக்க முழுக்க பொய்யானது.

Why and How does Edappadi Palanisamy is focusing on the PTR Palanivel Thigarajan Audio issue?

எளிதில் அணுகக்கூடிய மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புனையப்பட்ட அல்லது இயந்திரத்தால் உருவாக்கப்பட்ட ஆடியோ கிளிப்களை உருவாக்கும் திறன் தற்போது உலகம் முழுக்க உள்ளது. இதன் மூலம் வரும் நாட்கள் மற்றும் மாதங்களில் அதிக தீங்கிழைக்கும் உள்ளடக்கத்துடன் அதிகமான ஆடியோ மற்றும் வீடியோ கிளிப்கள் வெளியானாலும் அதை கண்டு நாம் ஆச்சரியப்பட கூடாது.

இந்த பொய்யான ஆடியோவை கிளிக் பைட் செய்தியாக வெளியிட வேண்டாம். நான்காம் தூணாக இருக்கும் ஊடகங்கள் இது போன்ற பொய்யான ஆடியோக்களுக்கு பின்னால் செல்ல வேண்டாம். அது மிகப்பெரிய தவறாக அமைந்துவிடும்,

இந்த சமீபத்திய ஆடியோக்கள் பற்றிய என்னுடைய ஒரே கடைசி அறிக்கை இதுதான். இனிமேல் இது போன்ற பொய்யான அவதூறுகளை நான் புறக்கணிப்பேன். இத்தகைய அவதூறுகள் என்னுடைய சகிப்புத்தன்மை மிஞ்சும் அளவிற்கு இருந்தால், நான் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

வழக்குத் தொடர, அதை விசாரிக்க பல மாதங்கள் ஆகும் என்பதை நான் உணர்ந்தாலும், அத்தகைய நடவடிக்கைகள் சிலருக்கு விளம்பரத்தை கொடுக்கும். நான் வழக்கு தொடுப்பது சிலருக்கு தேவைற்ற விளம்பரத்தை கொடுக்கும் என்பதால் அதை செய்ய மாட்டேன், என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டு உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+