நேற்று அவ்ளோ கோபம் வந்ததே! ஓபிஎஸ் அருகே இன்று சாந்தமாக அமர்ந்த எடப்பாடி! பேச்சே இல்லை! இதான் காரணமா?
சென்னை: நேற்று ஓ பன்னீர்செல்வத்திற்கு அருகில் அமர மறுத்து கோஷம் எழுப்பிய எடப்பாடி பழனிசாமி.. இன்று அவருக்கு அருகில் சாந்தமாக அமர்ந்திருந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை திமுகவினர் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
நேற்று தமிழ்நாடு சட்டசபையில் பெரிய களேபரம் நடந்தது. ஒரு பக்கம் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஓ பன்னீர்செல்வம் இருக்கை விவகாரத்தை எழுப்பி கோஷம் போட்டனர். இன்னொரு பக்கம் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகள் எதிர்த்து முதல்வர் ஸ்டாலின் நேற்று தனித்தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ளது.

குடிமைப்பணி பயிற்சி பெற்றவர்கள் முன்னிலையில் பேசிய ஆளுநர் ஆர். என் ரவி, சட்டசபையில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் நிலுவையில் வைத்தால் அதற்கு நாகரீகமாக ஒப்புதல் தரவில்லை என்பதே பொருள். கிடப்பில் கிடந்தால் அந்த சட்டம் இறந்துவிட்டதாகவே பொருள் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகள் எதிர்த்து முதல்வர் ஸ்டாலின் நேற்று தனித்தீர்மானம் தாக்கல் செய்து அதை நிறைவேற்றினார்.
சட்டசபை மசோதாக்களை டெல்லிக்கு அனுப்ப கால நிர்ணயம் செய்தல், ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து இன்று தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவோடு இந்த தீர்மானம் வெற்றிபெற்றது. 144 உறுப்பினர்களிடம் ஆதரவோடு இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
நேற்று இந்த தீர்மானத்தை தாக்கல் செய்யும் முன் ஆளுநர் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்கக் கூடாது என்ற விதிகளை தளர்த்துவதற்கான இன்னொரு தீர்மானத்தை கொண்டுவந்தார் அவை முன்னவர் துரைமுருகன். அவையில் உள்ள மொத்த உறுப்பினர்களில் நான்கில் 3 பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்பதால் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தீர்மானத்தின் மீது வாக்கெடுப்புக்காக பேரவை கதவுகள் அடைக்கப்பட்டன.

வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்ய சபாநாயகர் அப்பாவுவிடம் பாஜக உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை,
ஆனால் அதற்கு முன்னதாக அதிமுகவினர் சபையில் இருந்தே வெளியேறிவிட்டனர். ஓ பன்னீர்செல்வத்தின் இருக்கையை மாற்ற வேண்டும். அவரின் இருக்கையில் ஆர்பி உதயகுமாரை அமர வைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்எல்ஏக்கள் கூறி அமளி செய்து களேபரம் செய்தனர். நேற்று எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் சரியாக ஆளுநருக்கு எதிரான தீர்மானம் தாக்கல் ஆகும் முன்பாக அவையில் இருந்து வெளியேறிவிட்டனர். பாஜகவினர் மட்டுமே பூட்டிய சட்டசபைக்குள் மாட்டிக்கொண்டனர்.
சரியாக ஆளுநருக்கு எதிரான தீர்மானம் வரப்போகிறது என்று முதல் நாளே தெரிந்த நிலையில்.. அந்த தீர்மானம் விவாதத்திற்கு முன்பே வாக்கெடுப்பில் கலந்து கொள்வதை தவிர்த்து எடப்பாடி பழனிசாமி அணி அவையில் இருந்து வெளியேறிவிட்டது. இதனால் ஆளுநருக்கு எதிரான விவகாரத்தில் அதிமுகவின் நிலைப்பாடு என்ன என்பதே தெரியாமல் போய் விட்டது.

நேற்று ஓ பன்னீர்செல்வத்திற்கு அருகில் அமர மறுத்து கோஷம் எழுப்பிய எடப்பாடி பழனிசாமி.. இன்று அவருக்கு அருகில் சாந்தமாக அமர்ந்திருந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை திமுகவினர் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். ஆளுநருக்கு எதிராக இன்று தீர்மானம் எதுவும் இல்லாத நிலையில்.. ஓ பன்னீர்செல்வம் அருகில் அமர்வதை பற்றி எடப்பாடி பிரச்சனை எழுப்பவில்லை. நேற்று தீர்மானத்தில் இருந்து தப்பிக்கவே எடப்பாடி இருக்கை விவகாரத்தை கையில் எடுத்தார் என்று திமுகவினர் விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர்.
-
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
பாஜக தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி.. மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன்? -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications