• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இரவெல்லாம் அழுத பெண்.. காரணமே மாமியாரும் அவரும்தான்.. தூக்கமே வரலம்மா.. சுருண்டு விழுந்து.. என்னாச்சு

Google Oneindia Tamil News

கள்ளக்குறிச்சி: "அம்மா தூக்கமே வரல.. கொஞ்சம் தண்ணி வேணும்" என்று கேட்டபடியே சரிந்து விழுந்துள்ளார் இளம்பெண்.. இதையடுத்து, நடந்த சம்பவங்களை கேள்விப்பட்டு கள்ளக்குறிச்சி மாவட்டமே அதிர்ந்து போயுள்ளது.
திருக்கோவிலூர் நகராட்சி எல்லைக்கு உட்பட்டது சந்தைப்பேட்டை.. இந்த பகுதியை சார்ந்தவர் அப்சா.. 25 வயதாகிறது..

கடந்த வருடம் இவருக்கு திருமணம் ஆனது.. அதே பகுதியை சேர்ந்த தஸ்தகீர் என்பவரை காதலித்து வந்தார்.. இருவருமே தங்கள் காதலை, பெற்றோர்களிடம் தெரிவித்து, முறைப்படி சம்மதம் பெற்று திருமணத்தை செய்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் அடுத்த நகர்வு- பிரேத பரிசோதனை ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது ஜிப்மர் குழு! கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் அடுத்த நகர்வு- பிரேத பரிசோதனை ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது ஜிப்மர் குழு!

மாமியார்

மாமியார்

ஆனால், கல்யாணமான அடுத்த ஓரிரு மாதங்களிலேயே தம்பதிக்குள் கருத்து வேறுபாடுகள் வெடித்தன.. மற்றொருபக்கம், மாமியார் வீட்டில், வரதட்சணை கொடுமையும் அப்சாவுக்கு ஆரம்பமானது.. ஒருகட்டத்தில் அவர்களின் டார்ச்சர் தாங்க முடியாமல், தன்னுடைய அம்மா வீட்டிற்கு வந்துவிட்டார் அப்சா.. இதனிடையே 2 மாதங்களுக்கு முன்பு அப்சாவிற்கு பெண் குழந்தையும் ஒன்றும் பிறந்துள்ளது.. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவெல்லாம் அப்சா அழுது கொண்டே இருந்தார்.

சாயங்காலம்

சாயங்காலம்

பிறகு, நேற்று காலை தனக்கு தூக்கம் வருவதாக தன்னுடைய அம்மாவிடம் சொல்லிவிட்டு, வீட்டின் மேல் ரூமிற்கு சென்றார்.. ஆனால், மறுபடியும் சாயங்காலம் தன்னுடைய அம்மாவிடம் வந்த அப்சா, "அம்மா.. தூக்கமே வரலை.. நான் எலி பேஸ்ட் சாப்பிட்டுட்டேன்" என்று சொல்லி உள்ளார்.. இதைக் கேட்டு பதறிப்போன அவரது அம்மா, அக்கம் பக்கத்தினர் உதவியோடு அப்சாவை திருக்கோவிலூர் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.. ஆனால் வழியிலேயே அப்சாவின் உயிர் பரிதாபமாக பிரிந்தது.

 அப்சா ரூமில்..

அப்சா ரூமில்..

இதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்த திருக்கோவிலூர் போலீசார், அப்சாவின் உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. பிறகு இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணையும் மேற்கொண்டனர்... அப்சாவின் ரூமில் சோதனை நடத்தினர்.. அப்போது, உயிரிழந்த அப்சா எழுதி வைத்திருந்த ஒரு லெட்டர் சிக்கியது.

 லெட்டர் + வீடியோ

லெட்டர் + வீடியோ

அந்த லெட்டரில், "என் சாவுக்கு காரணம், என் கணவர், மாமனார், மாமியார் உள்ளிட்ட 7 பேர்தான்.. அவர்கள்தான் என்னை வரதட்சணை கொடுமை செய்து வந்தனர்.. பெண் பிள்ளை பெற்ற காரணத்தினால் என்னை வீட்டில் சேர்க்கவில்லை.. பெண் குழந்தையை கொல்லவும் முயன்றனர்.. எனக்கு பெண் குழந்தை பிறந்துவிட்டதற்கு நான் என்ன செய்ய முடியும்? காலம் நிறைய மாறிவிட்டது.. பெண் பிள்ளையை பெற்ற காரணத்தினால் என்னை அடிக்கடி தற்கொலை செய்து கொள்ள தூண்டினார்கள்..

 சர்ட்டிபிகேட்கள்

சர்ட்டிபிகேட்கள்

என் திருமண சீர் மற்றும் என்னுடைய போன், சர்ட்டிபிகேட்டுகள் அனைத்தையும் பெற்று என் குடும்பத்தாரிடம் ஒப்படைக்க வேண்டும்.. நஷ்ட ஈடு பெற்று என் குழந்தையின் வருங்காலத்தை பார்த்துக் கொள்ளுங்கள்..இந்த விவரங்கள் அனைத்தையும் நான் வீடியோவாகவும் பதிவு செய்து வைத்துள்ளேன" என்று அப்சா அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்... இந்நிலையில், அப்சாவின் அம்மா, போலீசாரிடம் வரதட்சணை கொடுமை செய்து தன்னுடைய மகளை தற்கொலை தூண்டிய அவரது கணவர் உள்ளிட்ட 7 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார்.

 B.C.A. டிகிரி

B.C.A. டிகிரி

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், திருமணம் நடந்து ஒரு வருடத்திற்குள் நடைபெற்ற சம்பவம் என்பதால் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர்... உயிரிழந்த அப்சா, பி.சி.ஏ. பட்டதாரியாம்.. இறப்பதற்கு முன்பு, அம்மாவிடம் பேசியபோது, அம்மா.. கொஞ்சம் தண்ணி தாங்க என்று கேட்டுள்ளார்.. இதுதான் அவர் கடைசியாக பேசிய வார்த்தையாம்.. அம்மா தண்ணீர் கொண்டு வருவதற்குள், மயங்கி விழுந்திருக்கிறார்.. அப்சாவின் போஸ்ட் மார்ட்டம் முடிந்து, உடலை ஆம்புலன்ஸில் கொண்டு வந்தபோது, அப்சாவின் உறவினர்கள் ஆம்புலன்சை வழிமறித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 போஸ்ட் மார்ட்டம்

போஸ்ட் மார்ட்டம்

அப்சாவின் மரணத்துக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் கண்ணீர் கோரிக்கை விடுத்தனர்.. இது பற்றி தகவல் அறிந்ததும் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி தலைமையிலான போலீசார் விரைந்து வந்து அப்சாவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பவத்துக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்வதாக உறுதியளித்ததையடுத்து, ஆம்புலன்ஸுக்கு வழிவிடப்பட்டது.. தற்கொலை செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே முடிவு செய்திருந்த நிலையில்தான், 4 பக்கத்துக்கு கடிதம் எழுதியிருந்தார் அப்சா.

 மாமியார் + கணவர்

மாமியார் + கணவர்

என் குழந்தையை கொல்ல சொல்லி கணவர் குடும்பத்தினர் மிரட்டினர்.. நான் பெற்றெடுத்த குழந்தையை கொல்ல விருப்பமில்லை... என் குழந்தை இந்த உலகில் வாழ வேண்டும்... அதனால், நான் சாகிறேன்.. இது எல்லாவற்றிற்கும் என் மாமியாரும், அவரும்தான் காரணம்" என்று எழுதியிருந்ததை பார்த்து கதறி கதறி குடும்பத்தினர் அழுதனர்.. இது தொடர்பான விசாரணையும் சூடுபிடித்துள்ளது. அப்சா எழுதிய 4 பக்க கடிதமும், வீடியோவும் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

English summary
Why did young girl take this sudden decision and what happened in Kallakkurichi Thirukovilur இளம்பெண் வரதட்சணை கொடுமையால் எலிபேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X