திமுக வேட்பாளர் நேர்காணலில் மாவட்ட செயலாளர்கள் அவுட்.. பின்னணியில் பரபரப்பு காரணங்கள்
சென்னை: வேட்பாளர் நேர்காணலின்போது அந்தந்த தொகுதியைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்களை உட்கார வைப்பார்கள். இந்த முறை அப்படி உட்கார வைக்கவில்லை. இதன் பின்னணியில் உள்ள பரபரப்பு காரணங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
திமுகவில் குறுநில மன்னர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள், மாவட்ட செயலாளர்கள். கடந்த சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களின்போது, மாவட்ட செயலாளர்கள் கை காட்டுவோருக்குதான் சீட் தரப்படுவதாக புகார் எழும் அளவுக்கு அவர்கள் கை ஓங்கியிருந்தது.
கடந்த சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலின்போது, கட்சிக்கே சம்பந்தம் இல்லாத பணக்காரர்கள் சிலரிடம் மாவட்டச் செயலாளர்கள் பணம் வாங்கிக் கொண்டு வேட்பாளர்கள் ஆக்கியதாகவும் குற்றச்சாட்டு கிளம்பியது.

மா.செ.க்கள் அட்ராசிட்டி
திமுக மீது கணிசமான நடுநிலை வாக்காளர்களுக்கு கோபம்வர இந்த மாவட்ட செயலாளர்களின் அட்ராசிட்டிகள் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. இந்நிலையில்தான் இத்தேர்தலில் பெரும் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது திமுக தலைமை.

மாற்றம், முன்னேற்றம்
திமுக நடத்திய நேர்க்காணலின்போது, மாவட்ட செயலாளர்களை உள்ளே அனுமதிக்கவில்லை என்பது திமுகவில் மாற்றம் அரங்கேறியுள்ளது என்பதை காண்பிக்கும் வகையில் இருந்தது.

தோல்வி
கடந்த சட்டமன்றத் தேர்தலில், அடுத்து நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்த மாவட்டச் செயலாளர்கள் பரிந்துரைத்த வேட்பாளர்களைத்தான் தலைமை அறிவித்தது. ஆனால், அவர்களால் வெற்றி பெற முடியவில்லை என்பதும் இவர்களை வெளியில் வைக்க காரணம்.

வளரவிடுவதில்லை
மேலும், மாவட்டங்களில் தங்களைவிட யாரும் வளந்துவிடக்கூடாது என்பதற்காக, மக்கள் செல்வாக்கு இல்லாத பலரையும் வேட்பாளர்களாக சிபாரிசு செய்தது தோல்விக்கு மற்றொரு காரணம்.

அதிமுக பாணியில்
சில மாவட்டங்களில், வேட்பாளர்களிடம் மிரட்டியே பணம் பறித்ததாகவும் மாவட்ட செயலாளர்கள் மீது குற்றச்சாட்டு இருந்து வந்தது. இந்நிலையில்தான், மாவட்ட செயலாளர்களை புறக்கணித்து, அதிமுக தலைமை பாணியில், திமுக தலைமையும், முடிவுகளை எடுக்க முற்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications