விருத்தாசலம் திமுக வேட்பாளர் மாற்றப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு- தீக்குளிக்க முயற்சி
விருத்தாசலம்: விருத்தாசலம் சட்டசபை தொகுதி திமுக வேட்பாளர் தங்க. ஆனந்தன் திடீரென மாற்றப்பட்டதற்கு அக்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திமுக தலைமையின் இந்த நடவடிக்கைக்கு எதிராக சிலர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம் தொகுதியில் திமுக வேட்பாளராக தங்க. ஆனந்தன் அறிவிக்கப்பட்ட உடனேயே கடும் எதிர்ப்பு எழுந்தது. ஸ்ரீமுஷ்ணத்தைச் சேர்ந்த தங்க. ஆனந்தனை எப்படி விருத்தாசலம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கலாம்? என கொந்தளித்தனர்.

திமுகவினர் போராட்டம்
அத்துடன் சென்னை அண்ணா அறிவாலயத்தை திமுகவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு திமுக மாஜி எம்எல்ஏ குழந்தை தமிழரசன் பின்னணியில் இருந்தார். அவரும் விருத்தாசலத்தில் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினார்.

காங். எதிர்ப்பு
மேலும் தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத நபரை இறக்குவதா? என காங்கிரஸ் சார்பிலும் போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டன. இந்த பரபரப்புகளுக்கு மத்தியில்தான் திமுக வேட்பாளர் தங்க. ஆனந்தன் மாற்றப்பட்டு பாவாடை கோவிந்தசாமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தீக்குளிப்பு முயற்சி
ஆனால் தற்போது தங்க. ஆனந்தன் மாற்றப்பட்டதைக் கண்டித்தும் அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்க. ஆனந்தனுக்கு ஆதரவாக சிலர் தீக்குளிக்கவும் முயன்றனர்.

ஸ்டாலின் பிரசாரம் ரத்து
இதனிடையே விருத்தாசலம் தொகுதியில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் நேற்று பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால் ஸ்டாலின் பிரசாரம் செய்ய இருந்த மேடையிலேயே சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்றும் தங்க. ஆனந்தன் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து விருத்தாசல பிரசார கூட்டத்தை ஸ்டாலின் ரத்து செய்துவிட்டார். இதனால் தற்போது விருத்தாசலம் தொகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications