முடித்துவைக்கப்பட்ட காவிரி பிரச்சனையை கிளறிவிடும் கமல்!
காவிரி பிரச்சனையை கமல்ஹாசன் மீண்டும் எழுப்பியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
Recommended Video

சென்னை: உச்சநீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டு மத்திய அரசும் மேலாண்மை ஆணையத்தை அமைத்த பின்னரும் காவிரி பிரச்சனையை பேசி தீர்ப்போம் என கமல் உளறி கொட்டியிருப்பது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி நதிநீர் பிரச்சனைக்காக எத்தனையோ பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும் பயன்கிடைக்காத நிலையில்தான் நடுவர் மன்றமே அமைக்கப்பட்டது. நடுவர் மன்றத்தின் இடைக்கால தீர்ப்பு, இறுதித் தீர்ப்பையும் கூட கர்நாடகா மதித்ததே இல்லை.

இந்த விவகாரங்களில் உச்சநீதிமன்றம் தலையிட்டு பிறப்பித்த உத்தரவுகளையும் கூட உதாசீனம் செய்கிறது கர்நாடகா. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிரான அப்பீல் வழக்கின் தீர்ப்பில் சொல்லப்பட்ட எதனையுமே ஏற்க மறுத்து வருகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் கூட அல்ல ஒரு ஆணையத்தை மத்திய அரசு ஒருவழியாக அமைத்து கெஜட்டில் வெளியிட்டு விட்டது. இந்த ஆணையத்தையும் ஏற்க முடியாது என அடம்பிடித்துக் கொண்டிருக்கிறது கர்நாடகா.
கர்நாடகாவின் வம்படியான போக்கால் 400-க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் மாண்டு போயினர். காவிரியில் நமக்கான உரிமையை கர்நாடகா கபளீகரம் செய்யப் பார்க்கிறது. மேலாண்மை ஆணையமாவது காவிரி நீரை பெற்றுத்தருமா? என காத்திருக்கிறது தமிழகம்.
இந்த அடிப்படை விஷயங்களை உணராமல் அல்லது தெரியாமல் காவிரி பிரச்சனைக்கு பேச்ச்வார்த்தை மூலம் தீர்வு காணலாம் என உளறிக் கொட்டியிருக்கிறார் கமல். கர்நாடகா முதல்வரும் தமிழக அரசும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்தால் நாங்களும் தயார் என கூறியிருக்கிறார்.
மறுபடியும் முதலில் இருந்தா? என தமிழகத்தை சலிப்படைய வைத்திருக்கிறது கமலின் இந்த முயற்சி. கமல்ஹாசன் என்ன தமிழகத்து பிரதிநிதியா? புதிய அரசியல் கட்சி தொடங்கி விளம்பரம் தேவைப்பட்டால் சீக்கிரமே பிக்பாஸை ஒளிபரப்புங்க என்று விஜய் டிவியிடம் மல்லுக்கட்டலாமே தவிர விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் வகையில் நடந்து கொள்வது தப்பு! கண்டனத்துக்குரியது!
-
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
சப்ஜெக்ட்டுக்கு உயிர் வந்துருச்சு.. திருச்சி கிழக்கில் கமலை இறக்குங்க! திடீரென குரல் கொடுக்கும் மநீம -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications