For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுகவை கழற்றிவிடுகிறதா காங்கிரஸ்? ராமதாஸ் கூறியதன் அர்த்தம் என்ன?

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    ராமதாஸின் அறிவிப்பு திமுகவுக்கு வைக்கும் செக்கா ?

    சென்னை: திமுக கூட்டணியில் இருந்து வெளியேற காங்கிரஸ் காய் நகர்த்துகிறதா என்ற கேள்விகளை சமீபத்திய சில அரசியல் செயல்பாடுகள் எழுப்புகின்றன.

    2014 லோக்சபா தேர்தலில் திமுக, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தது. ஆனால், மோடியா, லேடியா என்ற போட்டியில், திமுக கூட்டணி தவிடுபொடியாகிவிட்டது.

    திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு தமிழகத்தில் ஒரு சீட் கூட கிடைக்கவில்லை. அதேநேரம், மோடியின் பாஜக கூட்டணி கூட கன்னியாகுமரி மற்றும் தருமபுரி ஆகிய 2 லோக்சபா தொகுதிகளை வென்றது. மற்றவை 'லேடியின்' (ஜெயலலிதா பேசிய பஞ்ச் வசனம் இது) அதிமுக வசம் சென்றன.

    காங்கிரசால் தோல்வி என விமர்சனம்

    காங்கிரசால் தோல்வி என விமர்சனம்

    கடந்த தமிழக சட்டசபை தேர்தலிலும், திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்தது. ஆனால் திமுக கூட்டணி 98 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் வாய்ப்பை தவறவிட்டது. இதில் திமுக மட்டுமே 89 தொகுதிகளில் வென்றது. திமுக கூட்டணிக்கு காங்கிரஸ் மீதான மக்கள் அதிருப்திதான் காரணம் என்று, பேச்சு அடிபட்டது. இதனால் வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரசுக்கு குறைந்த இடங்களையே ஒதுக்க திமுக திட்டமிட்டுள்ளது. இதை காங்கிரஸ் ரசிக்கவில்லை.

    ராகுல் காந்தி செயல்பாடு

    ராகுல் காந்தி செயல்பாடு

    இந்த நிலையில்தான், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், மெட்ராஸ், கபாலி உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநரும், தலித்திய அரசியலை சினிமாவில் கூறுபவருமான இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அடுத்தடுத்த மாதங்களில் டெல்லியில் சந்தித்து பேசினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும், காங்கிரஸ் தலைமையுடன் நெருக்கம் காட்டுவதாக தெரிகிறது. திமுகவுக்கு கிலியூட்டி சீட்டுகளை அதிகம் பெறும் முயற்சியா இது என பேசப்பட்ட நிலையில் புது திருப்பம் நிகழ்ந்துள்ளது.

    காங்கிரசுடன் பாமக கூட்டணி

    காங்கிரசுடன் பாமக கூட்டணி

    நியூஸ் 18 தொலைக்காட்சியின் வெல்லும் சொல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாமக நிறுவனர் ராமதாஸ், காங்கிரசுடன் கூட்டணி வைக்க தயார் என கூறியுள்ளார். பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும், திமுக, அதிமுக தவிர்த்து பாமக தலைமையேற்க தயாராக உள்ள கட்சியுடன்தான் கூட்டு என்றும் கூறியுள்ளார். அவர் கூறியதில் இதுதான் முக்கியமானது. கவனத்தை திருப்புவதாக அமைந்துள்ளது.

    காங்கிரசுக்கு டிமாண்ட்

    காங்கிரசுக்கு டிமாண்ட்

    திமுகவுடன் கூட்டணி இல்லை என கூறும் ராமதாஸ், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசுடன் கூட்டணிக்கு தயார் என்று கூறியுள்ளதை எப்படி புரிந்து கொள்வது? திமுக கூட்டணியை உதறிவாருங்கள், நாங்கள் இருக்கிறோம் என்று காங்கிரசுக்கு பாமக விடுப்பும் அழைப்புதான் இது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இதன் மூலம், காங்கிரசின் கரம் வலுவடைந்துள்ளது. திமுகவுடன் தொகுதி பங்கீட்டில் பேரம் பேசி பணிய வைக்க சிறந்த வாய்ப்பை காங்கிரஸ் இப்போது பெற்றுள்ளது.

    கூட்டணி முக்கியத்துவம்

    கூட்டணி முக்கியத்துவம்

    தமிழகத்தில் திமுகவுக்கு இருக்கும் செல்வாக்கு காங்கிரசுக்கு இல்லை. இதுவே வாக்கு சதவீதங்கள் உணர்த்தும் பாடம். ஆனால், பாமக, கமல் கட்சி, டிடிவி தினகரன் கட்சி என பிற 2ம் கட்டத்திலுள்ள கட்சிகளை காங்கிரஸ் அரவணைத்து கூட்டணி அமைத்தால் திமுக வாக்கு வங்கியில்தான் அது ஓட்டையை போட்டு ஓட்டுக்களை உறிஞ்சும். கூட்டணியின் அவசியத்தை நன்கு உணர்ந்தவர் திமுக தலைவர் கருணாநிதி. சிறு கட்சிகளையும் அவர் புறம் தள்ளாமல் தொகுதிகளை ஒதுக்கீடு செய்து வந்தார். எனவே, காங்கிரசின் வியூகம் திமுகவுக்கு தலைவலியாக உருவெடுத்துள்ளது. இது அதிமுகவுக்கே சாதகமாக மாறக்கூடும்.

    English summary
    Why PMK founder Ramadoss trying to woo Congress while staying away from Congress alliance partner DMK?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X