திருமாவின் சட்டை மட்டும் கலர் மாறியது ஏன் தெரியுமா?
சென்னை : நாலு பேருல ஒருத்தர் மட்டும் கலர் மாற்றி சட்டை போட்டா கேள்வி வரத்தானே செய்யும். அப்படித்தான். மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் ஆகிய நான்கு பேரில் மூன்று பேர் ஆரஞ்ச் நிறத்தில் டி சர்ட் போட்டிருக்க, திருமாவளவன் மட்டும் பச்சை நிறத்தில் டி சர்ட் போட சமூக வலைத்தளத்தில் அதை வைத்து பிரச்சினையை கிளப்பினார்கள்.
இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தனது பேஸ்புக் பக்கத்தில் விளக்கம் கொடுத்திருக்கிறார். ஆரஞ்ச் டி.சர்ட் அளவு போதவில்லை அதனால் வேறு டிசர்ட் போடவேண்டியதாகி விட்டது என்று பதிவிட்டுள்ளார்.

கொஞ்சம் வாக்கிங்
மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் பிரச்சாரம் செல்லும் ஊர்களில் உற்சாகமாகவே வலம் வருகின்றனர். காலை நேரத்தில் காலார நடந்து கொடுக்க தவறுவதில்லை.

சேலத்தில் நால்வர்
கடந்த 2ம் தேதி மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் கிருஷ்ணகிரியில் காலை நடைப் பயிற்சி மேற்கொண்டபோது,விசிக தலைவர் திருமாவளவன் பச்சை கலர் டிசர்ட் அணிந்து சென்றது சமூக வலைத்தளங்களில் வைரல் ஹிட் அடித்துள்ளது.

கலர் மாறியது
வைகோ,ஜி.ராமகிருஷ்ணன்,முத்தரசன் ஆகியோர் ஆரஞ்சு,வெள்ளை,மஞ்சள் நிறங்கள் கலந்த டி-அணிந்து காலைநேர நடைப்பயிற்சி மேற்கொண்டனர்.ஆனால் திருமாவளவன் மட்டும் மற்ற மூவர்களுக்கு மாற்றாக கிளிப் பச்சை நிறத்தில் டிசர்ட் அணிந்து அவர்களுடன் நடைப் பயிற்சி சென்றார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தன.

வைரல் ஹிட்
ஏற்கெனவே திருமாவளவன் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலகிவிடுவார் என்று தகவல்கள் வெளியாகி வரும் நிலையில்,இந்த பச்சை கலர் டி- சர்ட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலரும் பலவித கருத்துக்களை பதிவிட்டனர்.

ஜி.ராமகிருஷ்ணன் விளக்கம்
இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில்,
' 3 வது கட்ட சுற்றுப்பயணத்தில் உள்ளோம். நடைப்பயிற்சி சென்ற புகைப்படத்தில் தோழர் திருமாவளவன் பனியன், தோழர் முத்தரசன் வேட்டி அணிந்தது பற்றி சில விமர்சனங்கள் வந்திருந்தன.

இதையெல்லாமா கேட்பீங்க?
நான்கு பேருக்கும் தோழர்கள் ஒரே வண்ண பனியன் கொடுத்தார்கள். மகிழ்ச்சியோடு அணிந்தோம். தோழர் திருமாவுக்கு பனியன் சற்று இருகப் பிடித்திருந்தது. அதனால், கையில் இருந்த மற்றொரு பனியனை அணிந்துகொண்டார். விமர்சிக்க எதுவுமில்லாத நிலையில் - எதையெல்லாம் விமர்சிக்கிறார்கள் என்று ஆச்சர்யமாக இருக்கிறது." என்று பதிவிட்டு விளக்கம் அளித்து இருந்தார்.

திருட்டு மின்சாரம்
இதோடு பிரச்சாரத்திற்கு திருட்டு மின்சாரம் பயன்படுத்தப்பட்டது பற்றி கருத்து கூறியுள்ள ஜி.ராமகிருஷ்ணன், இனி இதுபோல நடைபெறாமல் கவனமாக இருப்போம் என்று கூறியுள்ளார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications