For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாபநாசம் படத்துக்கு வரி விலக்கு கிடையாது.. அரசு அடித்துச் சொன்னதற்கு என்ன காரணம்?

Google Oneindia Tamil News

சென்னை: விஸ்வரூபம் படத்தின்போது அரசுக்கும், கமல்ஹாசனுக்கும் இடையே ஏற்பட்ட பெரும் மோதல் இன்னும் எதிரொலிப்பது போலவேத் தெரிகிறது. கமல்ஹாசன் நடித்து வெளியாகி, அத்தனை பேரும் வாயாரப் பாராட்டி வரும் பாபநாசம் படத்துக்கு தமிழக அரசு வரி விலக்கு அளிக்கவில்லை, மறுத்து விட்டது.

தமிழக அரசின் இந்த மறுப்பு பலரயைும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சமூகக் கேடு குறித்த விழிப்புணர்வு படமாச்சே இது. இதற்குப் போய் ஏன் வரிவிலக்கு தரவில்ல என்று பலரும் கேட்கிறார்கள்.

Why TN Govt refused tax soup to Papanasam movie?

இத்தனைக்கும் சென்சார் போர்டு இப்படத்துக்கு யு சான்றிதழ்தான் கொடுத்துள்ளது. அப்படி இருந்தும் படத்துக்கு வரிச் சலுகை கிடைக்கவில்லை. இதுகுறித்து அரசுத் தரப்பில் விளக்கம் வெளியாகியுள்ளது. அதன்படி பாபாநசம் படத்துக்கு ஏன் வரிவிலக்குத் தரப்படவில்லை என்பதை விளக்கியுள்ளனர். அதன் விவரம்...

  • கொலையை மறைக்கிற மனோபாவத்தை நியாயப்படுத்துவது போன்ற காட்சிகள்.
  • காவல்துறையின் கண்ணியமான செயல்பாட்டுக்கு இழுக்காக அமைந்த காட்சிகள்
  • தவறு செய்யும் ஒருவன் பாவம் தொலைக்க ஆற்றில் குளித்தால் பாவம் போகும் என்ற பிற்போக்குச் சிந்தனை
  • பள்ளி மாணவியைக் குளிக்கும்போது படம் பிடித்துக் காண்பிப்பது

இந்தக் காரணங்களால்தான் பாபநாசம் படத்துக்கு வரிச் சலுகை மறுக்கப்பட்டதாம்.

English summary
TN govt has clarified the reasons for refusing tax soup to Papanasam movie.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X