உல்லாசத்திற்கு இடையூறு... தலையணையால் அமுக்கி கணவரைக் கொன்ற மனைவி.. கள்ளக்காதலனுடன் கைது

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: தனது கள்ளக்காதலுக்கு கணவர் பெரும் இடையூறாக இருந்து வந்ததாலும், அடிக்கடி கண்டித்ததாலும் கடுப்பான மனைவி, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்று விட்டு, யாரோ கொன்னுட்டாங்க என்று நாடகமாடினார். கடைசியில் போலீஸார் உண்மையைக் கண்டுபிடித்து அப்பெண்மையும், கள்ளக்காதலனையும் கைது செய்தனர்.

மதுப் பழக்கம், கள்ளக்காதல் கொலைகள் மற்றும் பாலியல் பலாத்காரங்கள். நாடு முழுவதும் சமூகத்தை சீரழித்து வரும் பேரவலமாக இது மாறி வருகிறது. இதை ஒழிக்கவே முடியாது போலும். தினசரி இதுதொடர்பான செய்திகள் இடம்பெறாத ஊடகங்களே இல்லை.

இப்படித்தான் கிருஷ்ணகிரியில் ஒரு பெண் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கட்டிய கணவரை கொடூரமாக கொலை செய்து விட்டு கூலாக போலீஸ் ஸ்டேஷனுக்கும் போய் யாரோ கொன்னுட்டாங்க எஜமான் என்று புகாரும் கொடுத்துள்ளார். கடைசியில் இருவரும் கைது செய்யப்பட்டு தற்போது களி தின்பதற்காக சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தளி லாரன்ஸ்

தளி லாரன்ஸ்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளி அருகே உள்ள பெரிய ஆவேலிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் லாரன்ஸ். 35 வயதான இவர் தனியார் பேருந்து ஒன்றில் டிரைவராக இருந்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த 30 வயது கவிதாவை கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிரியதர்ஷினி (8), பிரியங்கா (5) என்ற 2 அழகான மகள்கள் உள்ளனர்.

திருமணத்திற்கு முன்பே கெட்ட பழக்கம்

திருமணத்திற்கு முன்பே கெட்ட பழக்கம்

திருமணத்திற்கு முன்பே கவிதா, ஹரீஷ் (25) என்ற ஆட்டோ டிரைவருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். வீட்டில் திருமணம் செய்து வைத்து விட்டதால் இவர்களது சுதந்திரமான நட்பு தடைபட்டது. இருந்தாலும் விடாமல் திருமணத்திற்குப் பிறகும் பழக்கத்தைத் தொடர்ந்தார். கணவர் இல்லாத சமயம் பார்த்து இருவரும் அடிக்கடி கூடி "பேசி"க் கொண்டனர்.

கொந்தளித்த லாரன்ஸ்

கொந்தளித்த லாரன்ஸ்

இந்த நிலையில் லாரன்ஸுக்கு விவரம் தெரிய வந்து அதிர்ந்தார். மனைவியைக் கண்டித்தார். ஆனாலும் முழுமையாக அவரால் மனைவியை திட்ட முடியவில்லை, அடக்க முடியவில்லை. காரணம் அவரிடம் இருந்த குடிப் பழக்கம். தினசரி குடிக்காவிட்டால் லாரன்ஸுக்கு தூக்கம் வராது.

கொலை செய்ய முடிவு

கொலை செய்ய முடிவு

கணவர் அடிக்கடி தொந்தரவு செய்து வந்ததால், அவரைத் தீர்த்துக் கட்ட முடிவு செய்தார் கவிதா. இதற்கு ஹரீஷும் சம்மதித்தார். இதைத் தொடர்ந்து கடந்த 12-ம் தேதி கணவர் லாரன்ஸ் வாங்கி வைத்திருந்த மது பாட்டிலில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை கலந்தார். அதை குடித்த லாரன்ஸ் மயங்கினார். பின்னர் தனது காதலன் ஹரிஸ் உதவியுடன் சேர்ந்து கணவர் லாரன்சை தலையணையால் முகத்தை அமுக்கி கொலை செய்தார்.

கொன்னுட்டாங்க எஜமான்

கொன்னுட்டாங்க எஜமான்

அதன் பின்னர் ஹரீஷுடன் போலீஸ் நிலையத்துக்குப் போய் தனது கணவரை யாரோ கொன்று விட்டதாக புகார் கொடுத்தார் கவிதா. பதறியடித்து ஓடி வந்த லாரன்ஸின் பெற்றோர் தங்களது மருமகள் மீது சந்தேகம் இருப்பதாக கூறவே, போலீஸார் முறைப்படி கவிதாவையும், ஹரீஷையும் விசாரித்தனர். அதில் உண்மையைக் கக்கி விட்டனர் இருவரும். இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

image courtesy: whatsapp

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+