கள்ளக் காதல் விவகாரத்தில் சென்னை தொழிலதிபர் படுகொலை- அரிவாளால் கழுத்தை அறுத்த மனைவி கைது!
சென்னை: சென்னை பிராட்வேயில் தொழிலதிபர் அக்பர் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக அவரது மனைவி பாத்திமாமுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பிராட்வே மண்ணடி கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த இரும்பு வியாபாரி அக்பர் (வயது 54). அக்பர் கழுத்து அறுபட்ட நிலையில் நேற்று படுக்கையறையில் பிணமாக கிடந்தார்.
இது பற்றி தகவல் அறிந்த வடக்கு கடற்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

காட்டிக் கொடுத்த மோப்பநாய்
அப்போது அழைத்துவரப்பட்ட மோப்ப நாய் சோனா வீட்டிலிருந்து தெரு வரை ஓடி சென்று நின்றுவிட்டது. இதனால் கொலையாளிகள் அதே தெருவில்தான் இருக்க வேண்டும் என போலீசார் முடிவு செய்தனர்.

முன்னுக்குப் பின் முரண்
இக் கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அக்பர் மனைவி பாத்திமாமுத்து முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தார். இதனால் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

கள்ளக்காதல் விவகாரம்
அப்போது கணவரை கொலை செய்ததை பாத்திமாமுத்து ஒப்புக்கொண்டார். அக்பருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.

கைவிட மறுப்பு
சில வாரங்களுக்கு முன்பு கள்ளக்காதலியுடன் இருந்த அக்பரை, பாத்திமாமுத்து கையும், களவுமாக பிடித்து எச்சரித்தார். ஆனால் குடிபோதையில் வந்த அக்பரிடம், பாத்திமாமுத்து கள்ளக்காதலை கைவிட கூறியபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

திருமணம் செய்வேன் என மிரட்டல்
அப்போது அக்பர், பாத்திமாமுத்துவை அடித்ததுடன் கள்ளக்காதலியை திருமணம் செய்வேன் என மிரட்டி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி பாத்திமாமுத்து, அக்பர் தூங்கியவுடன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து கணவரின் கழுத்தை அறுத்தார்.

நாடகம்
அவர் இறந்ததை உறுதி செய்த பிறகு தன்னுடைய அறைக்கு சென்று தூங்கினார். காலையில் எழுந்த உடன் கணவனை யாரோ கொலை செய்து விட்டார்கள் என நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பாத்திமுத்துவை போலீசார் கைது செய்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications