ஆசை 60 நாள்.. தலைமறைவான காதல் கணவன்.. திடீரென தர்ணாவில் நீலாம்பரி.. மாமியார் செய்த விபரீதம்
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே தன்னை கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி வீட்டின் முன்பு மனைவி தர்ணா போராட்டம் நடத்தியால் பொதுமக்கள் அங்கு கூட்டமாக கூடினார்கள்.இதனால் வேதனை அடைந்த மாமியார் திடீரென விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் அருகே ப.முத்தம்பட்டி பகுதியை சேர்ந்த முனிகண்ணன் மற்றும் பிரபாவதி ஆகியோரது மகன் திருப்பதி . இவருக்கு வயது 23 ஆகிறது. இவரும், அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் மகளான 23 வயதாகும் நீலாம்பரியும் காதலித்து வந்தனர்.

இந்நிலையில் இவர்களின் காதலுக்கு இரு வீட்டிலும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.ஆனால் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீசார் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.
இதையடுத்து நீலாம்பரியின் பெற்றோர் இவர்களது காதலைஏற்றுக்கொண்டனர்.இதையடுத்து இருவரும் பெண்ணின் வீட்டிலேயே 2 மாதங்களாக வசித்து வந்துள்ளார்கள். மாமியார் வீட்டிலே இருந்து மனைவியுடன் குடும்பம் நடத்தி வந்த திருப்பதி, திருமணம் முடிந்த 60 நாளில் பெற்றோர்களிடம் பேசி அழைத்து செல்வதாக கூறி ஒரு மாதத்திற்கு முன்பு சென்றுவிட்டார். அங்கு சென்ற திருப்பதி தலைமறைமாகி விட்டாராம். ஆசை 60 நாள், மோகம் 30 நாள் என்ற பாணியில், காதல் கணவன் பிரிந்து சென்றதால் அதிர்ச்சி அடைந்த நீலாம்பரி ஏன் பிரந்து சென்றாய் என்று திருப்பதியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கேட்டாராம்.
அப்போது திருப்பதி எனக்கு ரூ.25 லட்சம் ரொக்கம், 30 பவுன் நகை மற்றும் திருப்பத்தூரில் சொகுசு வீடு வாங்கி தர வர வேண்டும் என்பது என் பெற்றோரின் விருப்பம். அதை தான் நானும் கேட்கிறேன், இல்லை என்றால் உன்னோடு வாழ முடியாது என கூறி நீலாம்பரியின் செல்போன் நம்பரை பிளாக் செய்துவிட்டாராம்.
இதுகுறித்து நீலாம்பரி கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. பொதுவாக இதுபோன்ற குடும்ப வழக்குகளில் போலீசார் நிதானமாக செயல்படுவார்கள். ஏனெனில் தம்பதிகள் மீண்டும் சேர்நது கொள்வார்கள் என்பதால் பொறுமை காத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திடீரென நேற்று நீலாம்பரி, தனது கணவர் திருப்பதியின் வீட்டிற்கு போனார்.தன்னை கணவனுடன் சேர்த்து வைக்கும்படி கோரியிருக்கிறார். பின்னர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தும் மாமனார், மாமியார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உள்ளார். திடீரென தன்னை வீட்டில் சேர்க்க கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதை பற்றி சுற்றிருந்த வீட்டில் உள்ளவர்கள் அங்கு கூடினார்கள்.
இதனால் அதிர்ச்சி அடைந்த திருப்பதியின் தாயார் பிரபாவதி திடீரென விஷம் குடித்துள்ளார். இதையடுத்து அவரை குடும்பத்தினர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருக்கிறார்கள். கணவனுடன் சேர்த்து வைக்க கோரி மனைவி போராட்டம் நடத்திய நிலையில், மாமியார் விஷம் குடித்த சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications