எப்ப ஜெயிலுக்குப் போவார் எடப்பாடி பழனிச்சாமி?.. சசிகலாவைப் பார்க்க!
இப்போதைக்கு ஜெயில் பக்கம் வர வேண்டாம் என எடப்பாடி பழனிச்சாமிக்கு சசிகலா உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை: முதல்வர் பதவியில் அமர்ந்து விட்டதால் தேவையில்லாத சர்ச்சைகளைத் தவிர்க்க இப்போதைக்கு பெங்களூர் சிறை பக்கம் வர வேண்டாம் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு சசிகலாவிடமிருந்து உத்தரவு வந்திருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு விட்ட சசிகலா தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறார். சாதாரண கைதியாக அவரும் அங்கு அடைக்கப்பட்டுள்ளார்.

இன்று சசிகலாவை அவரது அக்காள் மகன் டிடிவி தினகரன், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஆகியோர் சென்று பார்த்தனர். இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் பார்க்கப் போவதாக செய்திகள் அடிபடுகின்றன. இருப்பினும் இப்போதைக்கு வர வேண்டாம் என்று எடப்பாடியாருக்கு உத்தரவு போயுள்ளதாக கூறப்படுகிறது.
இப்போது முதல்வர் பதவியில் இருப்பதால் ஜெயிலுக்குவருவதை தள்ளிப் போடுமாறும், இப்போதைக்கு இங்கு வருவதை தவிர்க்குமாறும் அவருக்கு சசிகலா தரப்பு உத்தரவிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதை ஏற்று போகாமல் இருப்பாரா அல்லது சின்னம்மாவைப் பார்த்தே ஆக வேண்டும் என்று கிளம்பிப் போவாரா என்பது தெரியவில்லை.
முதல்வர் எடப்பாடி இன்றுதான் தலைமைச் செயலகம் சென்று தனது முதல்வர் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார். ஜெயலலிதா பயன்படுத்திய அறை, அவரது இருக்கை ஆகியவற்றை அவர் பயன்படுத்த ஆரம்பித்துள்ளார். இந்த நிலையில் உடனேயே அவர் ஜெயிலுக்குப் போவாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
அலப்பறைக்கு ரெடியான RCB ரசிகர்கள்.. பெங்களூரில் மேம்பாலங்களை மூடும் போலீசார்.. பின்னணி இதுதான் -
IPL 2026: அடேங்கப்பா..! ஐபிஎல் பரிசுத்தொகை எவ்வளவு? வைபவ் சூர்யவன்ஷி காட்டில் கொட்டிய பணமழை! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications