ஜூலி அழறதைப் பாத்தா அடுத்த சீரியல் ஹீரோயின் ஆக்கிடுவாங்க போலிருக்கே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கங்காவுக்கு என்ன ஆச்சோ? சத்யாவுக்கு என்ன ஆச்சோ என்று பேசிக்கொண்டிருந்த பெண்கள் எல்லாம் பிக் பாஸ் வீட்டிற்குள் நடப்பதை பார்க்க ஆரம்பித்த பின்னர் பல சீரியல்கள் டல்லடிக்கின்றன. ஜூலியை இப்படி கதற கதற அடிக்கிறாங்களே என்பதுதான் இப்போதய ஹாட் டாபிக்.

பிக்பாஸ் வீட்டில் சிவப்பு துப்பட்டாவை தலையில் கட்டிக்கொண்டு போராளி போல நுழைந்த ஜூலியைப் பற்றியே பலரும் புரணி பேசினார்கள்.

ரவுடி போல சண்டை போட்ட ஆர்த்தியை வெளியேற்றி விட்டார்கள். ஸ்ரீ தொடங்கி ஆர்த்தி வரை அனைவரும் வெளியேற இப்போது 10 பேர் தாக்கு பிடிக்கின்றனர். நடிகை ஓவியாவிற்கு தனியாக ஆர்மிபடையே உருவாகியுள்ளது.

இப்படி கதற விடுவதா?

இப்படி கதற விடுவதா?

நேத்து என்ன ஆச்சோ ஏதாச்சோ ஜூலி வயிறை பிடித்துக்கொண்டு கதற ஆரம்பித்து விட்டது. கண்கள் மேலே சொருக கதறி அழுத ஜூலியை சுற்றி பிக் பாஸ் அனைவரும் கூடி விட்டனர்.

எல்லாம் நடிப்பா கோப்பால்

எல்லாம் நடிப்பா கோப்பால்

ஜூலிக்கு வயிறு வலிக்குது சொன்னது எல்லாம் நடிப்புப்பா என்று நமீதா தன் சக வீட்டு தோழியிடம் பேச அதை சில ஆமோதிக்கிறார்கள்.

ஆறுதல் சொன்ன ஓவியா

ஆறுதல் சொன்ன ஓவியா

ஜூலியோட வயிற்று வலியை எல்லோரும் நடிப்புன்னு சொல்ல, ஓவியா மட்டுமே ஆறுதல் சொல்ல அதுவே காயத்ரி ரகுராமிற்கும் ஓவியா, ஜூலி இடையேயான சண்டை ஏற்பட காரணமாகிறது.

ஓவியா ரசிகர்கள்

ஓவியா ரசிகர்கள்

ஓவியாவிற்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்துக்கொண்டே போகிறது. ஓவியா எதையும் கூலா சமாளிக்குதே என்றுதான் பலரும் பேசிக்கொள்கின்றனர். இதனால்

பக்கெட் பக்கெட்டாக கண்ணீர்

பக்கெட் பக்கெட்டாக கண்ணீர்

பிக் பாஸ் வீட்டுக்குள்ளே வந்ததுல இருந்தே இந்த ஜூலி பொண்ணு குடம் குடமா தண்ணீர் விடுதே, பேசாம சீரியல்ல நடிக்க வச்சிருங்கப்பா என்று இல்லத்தரசிகள் பேசிக்கொள்கின்றனர். இது எந்த சீரியல் டைரக்டர்கள் காதிலாவது விழுந்து விடப்போகிறது.

அதையும் நாங்க பார்க்கணும்

அதையும் நாங்க பார்க்கணும்

ஏற்கனவே சின்னம்மா என்று கூப்பாடு போட்டு பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ஜூலி, அங்கே செய்யும் அட்ராசிட்டி, அழுகைகளால் இனி சீரியல் உலகிற்குள் காலடி எடுத்து வைத்தாலும் ஆச்சரியமில்லை. ஆனால் ஜூலிம்மா ஓவர் அழுகை உடம்புக்கு ஆகாதும்மா...

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Fans expect that Big Boss Julie may act in TV serials after the end of Big Boss.
Please Wait while comments are loading...