எஸ்.வி.சேகரை கைவிட்ட பாஜக.. ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.. தமிழிசை உறுதி
பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக வலைதளத்தில் பதிவிட்டது தொடர்பாக நடிகர் எஸ்.வி.சேகர் மீது பாஜக மேலிடத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று தமிழ் மாநில பாஜக தலைவர் தமிழிசை
சென்னை: பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக வலைதளத்தில் பதிவிட்டது தொடர்பாக நடிகர் எஸ்.வி.சேகர் மீது பாஜக மேலிடத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று தமிழ் மாநில பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியனின் கன்னத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தட்டிக் கொடுத்தது சர்ச்சையானது. இந்த விவகாரத்தில் பெண் பத்திரிகையாளர்களை மிகவும் இழிவுபடுத்தி ஒரு பதிவை தமது சமூக வலைதளத்தில் எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார்.

இது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இப்பதிவு தொடர்பாக எஸ்.வி.சேகர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. சென்னை போலீசாரும் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து எஸ்.வி.சேகர் தலைமறைவானார். அத்துடன் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனுத் தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் வழங்கவில்லை. அத்துடன் அவரை கைது செய்யலாம் என்றும் கூறியது.
இந்த நிலையில் தற்போது எஸ்.வி.சேகர் மீது பாஜக கட்சி முடிவெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்க கட்சி தலைமைக்கு பரிந்துரைத்துள்ளோம் என்று தமிழ் மாநில பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டியில் ''எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்க கட்சி தலைமைக்கு பரிந்துரைத்துள்ளோம். இந்த புகார் பாஜக ஒழுங்கு நடவடிக்கை குழுவின் விசாரணையில் உள்ளது. எஸ்.வி.சேகர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது பற்றி கட்சி மேலிடம் முடிவு செய்யும்.குழுவின் பரிந்துரை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றுள்ளார்.
ஏற்கனவே போலீஸ் தேடிக்கொண்டு இருக்கும் எஸ்.வி.சேகரை தற்போது அவரது கட்சி தலைமையும் கைவிட்டுள்ளது. இது அவருக்கு இன்னும் பின்னடைவை ஏற்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications