"காணாமல்" போன காற்று.. மின் உற்பத்தி மடமடவென சரிவு
நெல்லை: ஆடி மாதத்தில் வீசும் காற்று திடீரென குறைந்து விட்டதால் காற்றாலை மின் உற்பத்தி சரிந்து விட்டது. இதனால் மின் வாரியத்தினர் கவலையில் உள்ளனர்.
தமிழகம் மின் உற்பத்தியில் தேவைக்கு ஏற்ப என்னும் நிலையை இன்னும் எட்ட முடியாமல் திணறி வருகிறது. மின் நுகர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் மின் உற்பத்தியோ குறைந்து வருகிறது.

தமிழகத்தில் மின் உற்பத்தி ஆதாரங்களில் காற்று காலங்களில் காற்றாலை மின்சாரம் மிக பஙகு வகிக்கிறது. நெல்லை மண்டலத்தில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காற்றாலைகளில் இருந்து காற்று மூலம் மின்சாரம் உற்பத்தி ஆனாலும் அவற்றை உபயோகப்படுத்த போதிய மின் பாதை இல்லை.
தென்மாவட்டங்களில் உற்பத்தியாகும் காற்றாலை மின்சாரம் புதிய மின் பாதை மூலம் வட மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்பட்டாலும் அதற்கும் மேல் கூடுதலாக உற்பத்தியாகும் மின்சாரத்தை கொ்ண்டு செல்ல வழி இல்லாததால் அவ்வப்போது காற்றாலைகளை நிறுத்தி வைக்கும் நிலை உள்ளது.
இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக ஆடி காற்று வீசியதால் காற்றாலை மின் உற்பத்தி சுமார் 3 ஆயிரம் மெகா வாட்டை எட்டியது. ஆனால் கடந்த இரண்டு தினஙகளாக ஆடிக்காறறு குறைந்து போய் விட்டது. இதனால் மின் உற்பத்தியும் சரிவடைந்து வருகிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நள்ளிரவு 2296 மெகா வாட் மின்சாரம் காற்றாலை மூலம் கிடைத்தது. இது அதிகாலை 1066 மெகா வாட்டாக சரிந்து போய் விட்டது. காற்றாலை மின் உற்பத்தி குறைந்தாலும் அனல் மின்சாரம் உள்ளிட்ட மின் உற்பத்தி நிலையங்கள் கை கொடுத்து வருகிறது.
மின் உற்பத்தி குறைந்துள்ளதால் வெளியிடத்தில் இருந்து மின் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. 675 மெகா வாட் கொள்முதல் செய்த நிலையில் தற்போது 1323 மெகா வாட் மின் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் மின் வாரியத்தினர் கவலையில் உள்ளனர்.
-
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications