கஷ்டப்பட்டு படிக்க வைத்த கணவர்.. போன இடத்தில் கள்ளக்காதல்.. ஓடிப் போன மனைவி!
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே கட்டடத் தொழிலாளி ஒருவர் தனது குடும்ப பொருளாதார நிலையையும் பொருட்படுத்தாமல் தனது மனைவிய மேல் படிப்பு படிக்க வைத்தார். ஆனால் கணவரையும், இரண்டு குழந்தைகளையும் தவிக்க விட்டு விட்டு தனது கள்ளக்காதலருடன் ஓடிப் போய் விட்டார் மனைவி.
கண்ணக்கோடு என்ற பகுதியைச் சேர்ந்தவர் ரசல்குமார் (27). கட்டட தொழிலாளியான இவரது மனைவி பெயர் ஷைனி. 22 வயதாகிறது. இருவரும் காதல் மணம் புரிந்தவர்கள். இவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர்.

ஷைனி பட்ட மேற்படிப்பு படிக்க விரும்பியதால் அவரை ரசல்குமார் படிக்க வைத்து வந்தார். படிப்பு தொடர்பாக அடிக்கடி நெல்லை போய் வந்தார். அப்போது டிரைவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக் காதலாக மாறியது. நேரில் பார்த்தது போக வீடு திரும்பியதும் செல்போனில் பேசியபடி இருப்பாராம் ஷைனி.
இந்த நிலையில் கடந்த 5ம் தேதி நள்ளிரவில் ஒரு போன் வந்துள்ளது. அதை எடுத்து ஷைனி நீண்ட நேரம் பேசியுள்ளார். அடுத்த நாள் காலையில் அவர் காணாமல் போய் விட்டார். ரசல்குமார் பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. வீட்டில் வைத்திருந்த 18 பவுன் நகைகள், பணம். தனது உடைகளுடன் அவர் மாயமாகி விட்டார்.
இதுகுறித்து அவர் போலீஸில் புகார் கொடுக்கவே, போலீஸார் விசாரணையில் இறங்கினர். அதில், களியக்காவிளையைச் சேர்ந்த ஒருவருடன்தான் அதிக நேரம் அவர் போனில் பேசியது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் விசாரித்தபோது அவர்தான் அந்த டிரைவர் என்றும், அவருடன் தான் ஷைனி ஓடிப் போனதும் தெரிய வந்தது. அவர்கள் தங்கிய இடத்தைக் கண்டுபிடித்த போலீஸார் அங்கு விரைந்தபோது இருவரும் அங்கிருந்து தப்பி விட்டனர். தற்போது கேரளாவுக்குப் போய் விட்டதாக கூறப்படுகிறது.
கணவரையும், இரண்டு குழந்தைகளும் பரிதவிக்க விட்டு விட்டு கள்ளக்காதலனுடன் ஓடிப் போன மனைவியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications