அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.50 லட்சம் சுருட்டிய "பரதநாட்டிய" பெண் கைது
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி அமைச்சர்கள், அதிகாரிகள் பெயரைப் பயன்படுத்தி ரூ.50 லட்சம் சுருட்டிய பரத நாட்டிய பெண்மணியை சென்னை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண் தனது பெயர் ஜோதிலட்சுமி(வயது 35) என்றும், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தனது சொந்த ஊர் என்றும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும், ஜோதிலட்சுமி, புவனேஸ்வரி, ஜெயஜோதி, ஜெயந்தி என்று பல்வேறு பெயர்களில் மோசடி ராணியாக வலம் வந்தவர் சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது உண்மையான பெயர் எது என்று யாருக்கும் தெரியவில்லை. இவர் மீது தற்போது 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
மோசடிராணியாக மாறிய பெண்
பரதநாட்டிய நடனப்பெண்மணியாக அரசு விழாக்களில் கலந்து கொண்டு பேரும், புகழும் பெற்றுள்ளார் இந்த நடன ராணி. ஆனால் திடீரென்று மோசடிராணியாக மாறியது பற்றி பரபரப்பான தகவல்கள் வெளிவந்துள்ளது.
அரசு வேலை
சென்னை மைலாப்பூரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவருக்கு அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி, ரூ.5 லட்சத்தை வாங்கி ஏப்பம் போட்டுள்ளார். இந்த புகாரில் மைலாப்பூர் போலீசாரால், கடந்த 29-9-2011 அன்று கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் ஜாமீனில் வெளிவந்த இவர் மீது, மீண்டும் அடுக்கடுக்கான புகார்கள் குவிந்தன.
சிங்கப்பூரில் நடன நிகழ்ச்சி
சிங்கப்பூரில் நடன நிகழ்ச்சி நடத்த அழைத்து செல்வதாக கூறி, சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த 10 மாணவ-மாணவிகளிடம் ரூ.10 லட்சம் சுருட்டியதாக கொடுக்கப்பட்ட புகாரில், இவரை கடந்த 19-6-2014 அன்று வியாசர்பாடி போலீசார் கைது செய்து சிறையில் தள்ளினார்கள்.
ரூ 50 லட்சம் சுருட்டல்
அடுத்து அரசு வேலை வாங்கி தருவதாகவும், அமைச்சர்கள், அரசு அதிகாரிகளை தனக்கு தெரியும் என்றும், 27 பேரிடம் லட்சக்கணக்கில் சுருட்டி இருக்கிறார். திருவல்லிக்கேணியைச் சேர்ந்த அனந்தநாயகி தனது சகோதரியின் மகன் வேலைக்காக, ரூ.2 லட்சத்தை ஜோதிலட்சுமியிடம் கொடுத்து ஏமாந்துள்ளார். மொத்தம் ரூ.50 லட்சத்தை சுருட்டியதாக ஜோதிலட்சுமி மீது குற்றம் சாட்டப்பட்டது.
3 வதுமுறையாகக் கைது
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் 3-வது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜோதி லட்சுமியை மீண்டும் கைது செய்து விசாரணை நடத்த கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். இதையடுத்து அவரை 3-வது முறையாக கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
செலவழித்து விட்டேன்
தற்போது புழல் பெண்கள் சிறையில் உள்ள ஜோதிலட்சுமி தனக்கு திருமணமாகி கணவர், குழந்தைகள் இருப்பதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். மோசடி பணத்தை தான் ஆடம்பரமாக செலவு செய்து, உல்லாச வாழ்க்கை வாழ்ந்து விட்டதாக அவர் போலீசாரிடம் கூறி இருக்கிறார்.
ஏமாற்றிய பணம் எங்கே
எனினும் ஜோதிலட்சுமி அந்தப் பணத்தில் சிங்கப்பூரில் சொத்துக்கள் ஏதாவது வாங்கி போட்டிருக்கலாம், என்று போலீசார் கருதுகிறார்கள். அதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. ஜோதிலட்சுமியிடம் ஏமாந்தவர்கள், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கலாம், என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications