கைவசம் பல காதல்கள்... பழைய கள்ளக் காதலனை போட்டுத் தள்ளிய பெண்.. வீட்டுக்குள்ளேயே புதைத்தார்!
நெல்லை: நெல்லை அருகே 2வது கள்ளக்காதலுக்கு இடைஞ்சலாக இருந்ததோடு ஆபாச படம் எடுத்து மிரட்டிய ஆசிரியரை அவருடைய கள்ளக்காதலியே கொன்று புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மூவரை கைது செய்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள தொலையாட்டம் கிராமத்தை சேர்நதவர் சந்தோஷ். இவர் நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே புல்லுகாட்டு வலசையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். பாவூர்சத்திரம் ராமையன்பட்டியில் வீடு வாடகைக்கு எடுத்து மனைவி ஆனுஷா மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார்.

கடந்த 6ம் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணக்காக செல்வதாக மனைவியிடம் கூறி விட்டு சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் தேடியும் எந்தவித பதிலும் கிடைக்காததால் பதறிய ஆனுஷா பாவூர்சத்திரம் போலீசில் புகார் செய்தார்.
இதுகுறித்து ஆலங்குளம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சங்கு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு காணமல் போன ஆசிரியரைத் தேடி வந்தனர். இதற்கிடையே ஆசிரியர் சந்தோஷ்க்கும் பாவூர் சத்திரம் பகுதியை சார்ந்த துபாயில் வசிக்கும் முருகன் என்பவரது மனைவி பொன் செல்வி என்ற பெண்ணுக்கும் கள்ளத் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து ஆசிரியரின் செல்போன் எண்களை ஆய்வு செய்ததில் கடைசியாக அவர் அந்த பெண்ணிடம் அதிக நேரம் பேசியது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவரையும் அவரது தம்பியையும் பாவூர் சத்திரம் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர்கள் அளித்த வாக்குமூலம் போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பொன்செல்வி குடியிருக்கும் வீட்டுக்கு அருகே சந்தோஷ் குடியிருந்த போது, அவரது மனைவி இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள ஊருக்கு சென்றிருக்கிறார். பொன்செல்வியின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இது இருவருக்கும் சாதகமாக போகவே சந்தோசுக்கும், பொன் செல்விக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆசிரியர் வேறு வீட்டுக்கு குடி போன போதும், இவர்கள் தொடர்பு நீடித்துள்ளது. இந்நிலையில் பொன் செல்விக்கும் மின்சார வாரியத்தில் பணியாற்றும் ஒருவர் உள்பட பலருடன் தொடர்பு இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த சந்தோஷ் பொன்செல்வியை கண்டித்துள்ளார். இதனை பொன்செல்வி ஏற்றுக் கொள்ளவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த சந்தோஷ், நாம் இருவரும் நெருக்கமாக இருக்கும் படத்தை உனது கணவருக்கு அனுப்பி விடுவேன் என பொன். செல்வியை மிரட்டியுள்ளார். இதனால் அதிர்சியடைந்த செல்வி, தனது விருப்பத்திற்கு தடையாக இருந்த சந்தோசை தீர்த்துக்கட்ட திட்டம் போட்டுள்ளார்.

கடந்த சில தினங்களாக சந்தோசுக்கும் பொன் செல்விக்கும் சண்டை வரவே, சந்தோசின் டார்ச்சர் தாங்காத செல்வி, நாகர் கோவிலில் தனியார் கல்லூரியில் பணியாற்றும் தனது தம்பி மாரியப்பனை கடந்த 5ஆம் தேதி வரவழைத்துள்ளார். அவரும் அக்காவின் பேச்சைக் கேட்டு கொலை செய்ய சம்மதித்தார்.
இந்நிலையில் பொன் செல்வி திட்டமிட்டப்படி கடந்த 6ஆம் தேதி பள்ளி விடுமுறையன்று சந்தோசை வீட்டுக்கு வரவழைத்து அங்கு மது விருந்து அளித்ததாகவும், பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக போதை ஏற ஏற மதுவில் விஷம் கொடுத்துள்ளார். பின்னர் பல்வேறு நாட்டு விஷ மருந்துக்களை அரைத்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதில் சந்தோஷ் இறந்துள்ளார்.
சந்தோசின் உயிர் பிரிந்ததை உறுதி செய்த பின்னர் சந்தோசை முழு நிர்வாணமாக்கி புதைத்துள்ளனர்.(போலீசாரை திசை திருப்பும் வண்ணம் உடலுறவு கொள்ளும் சமயம் இறந்ததாக கூறி தப்பும் வண்ணம் )ஏற்கனவே வீட்டுக்குள் கழிப்பறை அருகே காலி இடத்தில் குழிதோண்டி தயாராக வைத்திருந்த இடத்தில் நள்ளிரவில் சந்தோசை புதைத்ததுள்ளனர்.
இதனை போலீசில் வாக்குமூலமாக அளித்துள்ளனர். இதனையடுத்து சந்தோசை கொலை செய்து புதைத்த இடத்தை போலீசில் அடையாளம் காண்பித்தனர். தாசில்தார் கந்தசாமி முன்னிலையில் சந்தோசின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மது போதை, கள்ளக்காதல், ஆபாச வீடியோ என பல சர்ச்சைகளில் சிக்கிய ஆசிரியர் கடைசியில் தன்னுடைய உயிரை இழக்க நேரிட்டுள்ளது. ஆசிரியர் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிவி சீரியலில் வரும் கள்ளக்காதல், கொலை சம்பவம் போல நடந்துள்ளதாக சுற்றுவட்டார பகுதி பெண்கள் பேசிக்கொண்டனர்
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications