சேலம்: ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட பெண்ணின் நிர்வாண சடலம்...
சேலம்: சேலத்தில் ரயில் தண்டவாளத்தில் நடுத்தரவயது பெண் ஒருவரின் சடலம் நிர்வாண நிலையில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சேலம் ஜங்சன் அருகில் உள்ளது கந்தம்பட்டி. இங்கு ஈரோடு - சேலம் ரெயில் பாதை உள்ளது. இந்த பாதையில் இருந்து இன்று அதிகாலை நாய் ஒன்று பெண் ஒருவரின் கையை வாயில் கவ்வி எடுத்து கொண்டு ஓடியது. இதை இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சிலர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் நாயை விரட்டி விட்டனர். இதனால் நாய் கையை கீழே போட்டு விட்டு ஓடிவிட்டது.
இந்த கை யாருடையது என பார்க்க பொதுமக்கள் அந்த பகுதியில் உள்ள ரயில்பாதை பக்கம் சென்றனர். அப்போது அங்கு 45வயது மதிக்கத்தக்க பெண் சடலம் ஒன்று நிர்வாண நிலையில் கிடந்தது. தலை துண்டிக்கப்பட்ட நிலையில் தண்டவாளத்துக்கு நடுவில் அந்த பெண் பிணமாக கிடந்தார். இதை பார்த்து பொதுமக்கள் மேலும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி உடனே அவர்கள் சேலம் ஜங்சன் ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செல்லத்துரை, சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், ஏட்டு வெங்கடேசன் மற்றும் போலீசார் உடனே சம்பவ இடம் விரைந்து சென்று பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றினர்.
இந்த சடலம் கிடந்த இடம் அருகில் சிறிய சுருக்குப் பை ஒன்று இருந்தது. இதில் சுண்ணாம்பு டப்பா, சிறிய டார்ச் லைட் இருந்தது. இதை போலீசார் கைப்பற்றி இந்த பெண் யார்? எந்த ஊர்? என விசாரணை நடத்தினர்.
இவரை யாரும் கடத்தி சென்று பலாத்காரம் செய்து கொன்று பிணத்தை ரயில் பாதையில் வீசினரா? அல்லது வேறு காரணத்தால் இறக்க நேரிட்டதா? அல்லது ரயில் பாதையை கடக்கும் போது ரயில் மோதி இறந்தாரா? என்றும் விசாரணை நடக்கிறது.
சடலத்தின் அருகே புளு கலர் பூப்போட்ட சேலையும் கிடந்தது. இதையும் போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
அந்தப்பெண்ணை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை என்பதால் சடலத்தை சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்தில் போலீசார் வைத்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications