விபச்சார தொழிலை கெடுத்தார்... திட்டினார்... எரித்துக் கொன்றேன்.: பெண் வாக்குமூலம்
தன்னை விபச்சாரி என திட்டியதால் வீட்டு உரிமையாளரை தனது காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததாக இளம்பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை: வீட்டை வாடகைக்கு விட்ட உரிமையாளர், தன்னை விபச்சாரி என திட்டியதால் தனது காதலனுடன் சேர்ந்து அவரை எரித்துக் கொலை செய்ததாக ஆயிரம் விளக்குப் பெண் கொலை வழக்கில் கைதான இளம்பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மக்கீஸ் கார்டன் குடிசைப்பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் தனலெட்சுமி என்ற பெண் எரித்துக் கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வந்த போலீசார்,தனலட்சுமியின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த சுகந்தி என்ற இளம்பெண்ணின் மேல் சந்தேகமடைந்தனர்.

காவல்துறையினரின் கேள்விகளுக்கு முரண்பாடாக பதிலளித்த சுகந்தி,இறுதியில் தனது காதலனுடன் சேர்ந்து தனலட்சுமியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
இதனை தொடர்ந்து சுகந்தியையும்,அவரது காதலனான யுவன் என்பவனையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அந்த பெண் தனது வாக்குமூலத்தில்,
"என்னுடைய கணவன் என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.பிழைப்புக்கு வேறு வழியில்லாததால் வீட்டில் வைத்து விபச்சாரம் செய்து வந்தேன்.இதனால் அடிக்கடி என் வீட்டிற்கு ஆண்கள் வந்து சென்றனர்.
இதனை அறிந்த வீட்டு உரிமையாளர் தனலெட்சுமி,என்னை விபச்சாரி என திட்டி அசிங்கப்படுத்தியதோடு,இனி வீட்டிற்கு எந்த ஆண்களும் வரக்கூடாது என கூறிவிட்டார். இதனால் தொழில் பாதிக்கப்பட்டதோடு,வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டேன்.
வீட்டு வாடகை கொடுக்காததால்,வீட்டை காலி செய்யுமாறு தனலெட்சுமி நெருக்கடி கொடுத்தார். தண்ணீர் கேன் போடும் போது பழக்கமான எனது காதலன் யுவனுடன் சேர்ந்து தனலெட்சுமியை கொல்ல திட்டமிட்டேன். சம்பவத்தன்று தனலெட்சுமியை கடத்தி சென்று கொலை செய்த பின்னர் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக உடலை பெட்ரோல் ஊற்றி எரித்தோம். ஆனால் கடைசியில் போலீசில் மாட்டிக் கொண்டோம் என சுகந்தி தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு கடைசியில் உயிரையும் பறிகொடுத்துள்ளார் தனலட்சுமி என்று ஆயிரம் விளக்கு பகுதிவாசிகள் பரபரப்பாக பேசி வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications