Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Exclusive: ஆண்களின் சபலத்தால் பாதிக்கப்படுவது பெண்கள்தான்..! (பகுதி 3)

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளக்காதல்களைப் பொறுத்துவரை பாதிக்கப்படுவது பெண்கள்தான். காரணம், ஆண்களை பொருத்தவரை சபலம் அதிகமே. இதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை. கடைசியில் பாதிக்கப்படுவது பெண்கள்தான் என்று பிரபல உளவியல் நிபுணர் டாக்டர் அபிலாஷா கூறியுள்ளார்.

பெருகி வரும் கள்ளக்காதல்களுக்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. இதுதொடர்பான கொலைகளும் அதிகரித்துக் கொண்டுள்ளன. இதுகுறித்து டாக்டர் அபிலாஷாவிடம் கருத்து கேட்டிருந்தோம்.

 Women are the most affected in illegal love

டாக்டர் அபிலாஷா கூறுகையில் கள்ளக்காதல்களுக்கான காரணங்களை விளக்கியிருந்தார். சமூகத்தில் இவை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதையும் அவர் விவரித்துள்ளார். அவரது பேட்டியின் 3ம் பகுதி இதோ.

 Women are the most affected in illegal love

இதுவரை குழந்தைகளை அடித்ததேயில்லை என்று அபிராமியின் கணவர் கூறுகிறார். ஆனால் கொல்வதற்கு எப்படி மனம் வந்தது.

இதுபோன்ற ஒரு வெறி வந்தால் நிச்சயம் அவர்கள் அப்படி செய்வார்கள். குழந்தைகளை கொன்றுவிட்டு அந்த நபருடன் சந்தோஷமாக இருந்தேன் என்று அந்த பெண் வாக்குமூலம் கொடுத்திருப்பதற்கு காரணமே அவரது சுயநலமே ஆகும். தகாத உறவு மேல் உள்ள வெறி, ஈர்ப்பு, நாட்டம் காரணமாக குழந்தைகளை கொன்றுவிட்டார். இது முழுக்க முழுக்க அந்த நபரின் பேச்சால் மயங்கியதுதான். அந்த நேரத்தில் குழந்தைகள் உயிரை விட அதுதான் முக்கியமாக படும். ஏற்கெனவே அந்த பெண் அந்த நபருடன் போனதுமே அவரை விட்டிருந்தால் ஓரிரு மாதங்களில் அவராகவே மீண்டும் திருந்தி வந்திருப்பார். இதற்குள் அவர்களுக்கான உறவுகள் அனைத்தும் முடிந்து சலிப்பு ஏற்பட்டிருக்கும். அதைவிட்டு அந்த பெண்ணை போட்டு அடித்து உதைத்து, தகாத வார்த்தைகளால் பேசியது இவற்றையெல்லாம் செய்ததால் நீங்கள் அனைவரும் எனக்கு எதிரிகளாகிவிட்டீர்கள், என் சந்தோஷத்தை கெடுத்து விட்டீர்கள். இதனால் உங்கள் அனைவரையும் கொன்றுவிட்டு நான் செல்கிறேன், அப்போதுதான் எனக்கு எந்த இடைஞ்சலும் இருக்காது என நினைத்து கொன்றுவிட்டு சென்றிருக்கிறார்.

 Women are the most affected in illegal love

நாளை நம்மை விட சிறந்தவர்கள் கிடைத்தால் நாளை நம்மையும் கொன்றுவிடுவார், கொல்ல திட்டமிடுவார் என யோசனைகள் இருக்காதா?

அந்த நபருக்கு ஏற்கெனவே திருமணமாகியிருந்தாலும் இந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்திருக்கிறார். இந்த உறவு புளித்தவுடன் அடுத்தவரை நாட மாட்டார்கள் என்று சொல்வதற்கு இது ஒன்றும் தெய்வீக காதல் இல்லை. இருவருக்கும் ஒரு இச்சை, அது செட்டாகிவிட்டது. ஒருவருக்கொருவர் ஷேர் செய்து கொள்ள வேண்டும் என நினைத்துள்ளார்கள். அவர்களுக்குள் ஏற்கெனவே உடல்ரீதியான உறவு நடந்திருக்கும். நாம் பார்ப்பது உச்சக்கட்டம். ஏற்கெனவே நடந்த உறவு யாருக்கும் தெரியாமல் இருக்கும் வரை பிரச்சினையில்லை. அது தெரிந்து பெரிதாகிவிட்டது என்றவுடனே நமது சந்தோஷத்துக்கு ஏதாவது தடை போட்டு விடுவார்களோ என நினைக்க தோன்றும்.

தன் மீது கணவனுக்கு சந்தேகம் இருந்ததால்தான் இப்படி செய்தேன் என்று கூறிவிட்டதால்தான் பாதை மாறினேன் என்று கூறும் பெண்களை சந்தேகப்பட்டது நியாயம்தான் என்பதை நிரூபித்து விட்டார்கள் என வைத்து கொள்ளலாமா?

இல்லை அப்படி எடுத்துக் கொள்ள முடியாது. இதெல்லாம் பெண் இனத்துக்கே அவமானம். தாய்குலத்துக்கு பெரிய இழுக்கு. இதை எடுத்துக்காட்டாக எடுத்துக் கொண்டு நாம் பொது விஷயமாக்க முடியாது. இதெல்லாம் அபூர்வம். அமெரிக்காவில் ஒரு பெண் தனது 6 பிள்ளைகளையும் கொன்று சமைத்து டைனிங் டேபிளில் வைத்து விட்டார். அதற்காக அந்த பெண்ணை நாம் ரெஃபரென்சாக எடுக்க முடியாது. தனிப்பட்ட இச்சைக்காக செய்ததை பொதுவாக எடுக்கக் கூடாது. 16 வயதில் விதவையாகும் தாய் கடினமாக உழைத்து பிள்ளைகளை வளர்க்கும் தாய்கள் எத்தனையோ பேரை பார்த்துள்ளோம். எத்தனையோ விதவைகள் மறுமணம் செய்யாமல் குழந்தைகளுக்காக தியாகம் செய்கிறார்கள். ஏதோ ஒரு தடவை , இரு தடவை மட்டுமே மனைவியுடன் கணவன் உடல் உறவு கொண்டிருப்பார். அதிலேயே குழந்தை உண்டாகியிருக்கும். திடீரென அவர் இறந்திருப்பார். கொஞ்ச நாட்கள் கழித்து அந்த பெண் தனது குழந்தையை கரை சேர்க்க துடிப்பார். அதுபோன்ற சம்பவங்களும் உள்ளன.

இதுபோன்ற விஷயங்கள் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க சமூகத்தில் ஒரு பெரிய மாற்றம் நடைபெற வேண்டும். சீரியல்களில் கொண்டு வரும் கள்ளக்காதல் இவையெல்லாம் ஸ்லோ பாய்சன் மாதிரி. தினமும் இதுபோன்ற சீரியல்களை பார்ப்பதால் இது தவறில்லை என மனதிற்குள் தோன்றும். அதுபோல் சட்ட திட்டங்கள். ஒருவர் விவாகரத்து பெறுவது அந்த அளவுக்கு எளிதல்ல. விவாகரத்து என்றாலே ஒரு தலைக்குனிவு. பேப்பர்களை மாற்ற அலைவது, ஒவ்வொரு அலுவலகமாக சென்று பெயரை மாற்றுவது, பிள்ளைகளின் பள்ளி பதிவேடுகளை மாற்றவது என்பதெல்லாம் மிகவும் கடினம். எதற்காக இந்த சிக்கலை நாம் சந்திக்க வேண்டும் என்று நினைத்து ஓடி போகிறவர்கள்தான் அதிகம். எனவே சட்ட திட்டங்கள் எளிதாக இருந்திருந்தால் குழந்தைகளை கொல்லாமல் விட்டுவிட்டு கூட சென்றிருப்பார்கள். இந்த அபிராமி விவகாரத்தில் அவரது வாழ்க்கை மட்டுமல்லாமல் சுந்தரத்தின் மனைவியின் வாழ்க்கையையும் கெடுத்து விட்டார். எனவே நமது செய்கை எத்தனை பேரை பாதிக்கிறது என்பதை யோசித்து செய்ய வேண்டும். தனிமனித ஒழுக்கம் வேண்டும். பெற்றோரும் இந்த பெண்ணை செல்லமாக வளர்த்திருக்கலாம். தங்களிடம் வசதியில்லாவிட்டாலும் இருப்பதை கொடுத்து அந்த பெண்ணை சொகுசாக வாழ வைத்திருக்கலாம். கண்டிக்க தெரியாமல் கண்டித்திருக்கலாம். ஆரம்பத்திலேயே கண்டிப்பதை விட்டு விட்டு ஒரே இரவில் கண்டித்தால் இப்படிதான் நடக்கும்.

8 ஆண்டுகள் வாழ்ந்த கணவனை விட்டு விட்டு 2 மாத கள்ளக்காதலை..

8 ஆண்டுகள் வாழ்ந்ததால் அந்த பெண்ணுக்கு போர் அடித்திருக்கலாம். இருவருக்கும் இடையேயான சுவாரஸ்யங்கள் குறைந்திருக்கும். இந்த பெண் எதிர்பார்க்கிற மாதிரியான சந்தோஷமும் கிளுகிளுப்பும் அவர் கிட்ட இல்லாமல் இருந்திருக்கலாம். வேலைக்கு செல்வதால் ஒரு விதமான ஸ்டெரெஸ்ஸால் மனைவியுடன் உறவு கொள்ளாமல் இருந்திருக்கலாம். இந்த பெண் சாப்பாட்டு பிரியராக இருந்திருந்து அந்த நபரும் பிரியாணி கடையில் வேலை செய்வதால் இந்த பெண்ணுக்கு பிரியாணியா கொடுத்திருக்கலாம். இதுவே அவர் மீது ஈர்ப்பு வர காரணமாக இருந்திருக்கலாம்.

கள்ளக்காதலுக்கு அணுகும்போது இருவருக்கிடையே பயம் இல்லாதது ஏன்?

முற்காலத்தில் அந்த மாதிரி கேட்டது மாபாதகமாக இருந்தது. நடுரோட்டில் செருப்பால் அடித்து விடுவாரே என்ற பயம் இருந்தது. இன்று அந்த பயம் இல்லை. இருவரும் ஒருவரை ஒருவர் அணுகலாம் என்ற தெரியம் வந்துவிட்டது. பிடிக்காவிட்டால் பிடிக்கவில்லை என சொல்லுங்கள். அதற்காக ஏன் கோபப்படுகிறீர்கள் என்று கேட்கிறார்கள். ஒரு பெண்ணிடம் இப்படி கேட்பது தவறு என்பதை உணராமல் புடிக்கலைனா புடிக்கலைனு சொல்லுங்கள் என்று கூறிவிடுகிறார்கள். ஆண்களை பொருத்தவரை சபலம் அதிகமே. இதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை. ஏனெனில் பாதிக்கப்படுவது பெண்கள்தான்.

[பகுதி: 1, 2, 3, 4]

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+