Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'கணவர்களை' பிரிந்து வாழ்ந்த பெண்ணுடன் கள்ளக்காதல்.. பலான மாத்திரைகள்.. திருச்சி அருகே கொடூர கொலை

தொடர்ந்து பணம் கேட்டு தொல்லை செய்ததால், கள்ளக்காதலி தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கள்ளக்காதலில் பிரச்னை பெண் கொடூர கொலை

    திருச்சி : திருச்சி அருகே தொடர்ந்து பணம் கேட்டு தொல்லை செய்துவந்ததால், கள்ளக்காதலி தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த கள்ளக்காதலனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த மலம்பட்டி அருகே தச்சமலை வனப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் முகம் சிதைக்கப்பட்ட நிலையில், பெண் ஒருவரது உடலை போலீஸார் கைப்பற்றினர்.

    இதுகுறித்து துவரங்குறிச்சி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், சிங்கம்புணரி பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில், கொலை செய்ததை முருகன் ஒப்புக்கொண்டுள்ளார்.

    போலீசில் வாக்குமூலம்

    போலீசில் வாக்குமூலம்

    இதுதொடர்பாக முருகன் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் மலர்க்கொடி என்பதும், ஏற்கனவே இரண்டு திருமணங்கள் ஆன நிலையில், கணவர்களைப் பிரிந்து வாழ்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

    பணம் கேட்டு தொல்லை

    பணம் கேட்டு தொல்லை

    தனியாக வசித்து வந்த மலர்கொடி முருகன் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த சிலருடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 27ம் தேதி முருகனிடம் பணம் கேட்டு மலர்கொடி தொந்தரவு செய்ததாகவும் அதனால், இதனையடுத்து மலர்கொடியை வெளியே அழைத்துச்சென்ற முருகன், அவருக்கு செக்ஸ் மாத்திரைகள் கொடுத்து அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

    பலான மாத்திரைகள்

    பலான மாத்திரைகள்

    மாத்திரையின் அளவு அதிகமானதால், மலர்க்கொடி மயக்கம் அடைந்துள்ளார். அப்போது, தன்னிடம் தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் ஆத்திரமடைந்து அவரின் முகத்தில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு பின்னர் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக முகத்தை சிதைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டதாக முருகன் தெரிவித்துள்ளார்.

    நீதிமன்றத்தில் ஆஜர்

    நீதிமன்றத்தில் ஆஜர்

    இதனையடுத்து, அவரைக் கைது செய்து மணப்பாறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பிறகு, சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரபப்பை ஏற்படுத்தியுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+