சென்னையில் பரபரப்பு.. போலீஸ் நிலையத்தில் வைத்து சப் இன்ஸ்பெக்டருக்கு கத்திக் குத்து
சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் சப்இன்ஸ்பெக்டருக்கு கத்திகுத்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: சென்னை அயனாவரம் காவல்நிலையத்தில் வைத்து சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
அயனாவரம், ராமநாதன் தெருவை சேர்ந்தவர் ஆனந்தன். தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெயின்டர் சையத் முன்னாவுக்கும் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அயனாவரம் போலீஸ் நிலையத்தில் இருவரும் புகார் செய்தனர். அதனடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி அவர்கள் இரண்டு பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தி கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக சையத் முன்னா மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆனந்தனை குத்த முயன்றார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி அவரை தடுத்தார்.
இதனால் கோபமடைந்த சையத் முன்னா கத்தியால் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியை வெட்டினார். இதில் அவரது கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கு பணியில் இருந்த மற்ற போலீசார் சையத் முன்னாவை மடக்கி பிடித்து கத்தியை பறிமுதல் செய்தனர்.
பலத்த காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணிக்கு கைகளில் தையல் போடப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டரை தாக்கய சையத்முன்னாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications