எழுத்தாளர் செளபா திடீர் மரணம்!
Recommended Video

மதுரை: மகனைக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல எழுத்தாளர் செளபா என்கிற செளந்தரபாண்டியன் மதுரை அரசு மருத்துவமனையில் மரணமடைந்தார்.
உடல் நலம் பாதிக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவரது மரணச் செய்தி வந்துள்ளது. செளபாவின் கைது அதிர்ச்சியிலிருந்தே அவரது நண்பர்களும், வாசகர்களும் மீளாத நிலையில் அவரது மறைவு மேலும் அதிர்ச்சியைக் கூட்டியுள்ளது.

எழுத்தாளர் செளபாவின் மகன் விபின். 27 வயதான இவர் குடி அடிமை ஆவார். தாய்க்கும், தந்தைக்கும் பல்வேறு வழிகளில் சித்திரவதையாக இருந்து வந்தார் விபின். இந்த நிலையில், ஏப்ரல் 30-ந் தேதி முதல் விபினை காணவில்லை என தாய் லதா பூரணம் போலீசில் புகார் கொடுத்தார். இதனடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில் செளபா மீது சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து செளபாவிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், தாம் சுத்தியால் அடித்ததில் மகன் இறந்ததாகவும் அவனது உடலை கொடைரோடு அருகே உள்ள தோட்டத்தில் புதைத்ததாகவும் செளபா ஒப்புக் கொண்டார். இதனையடுத்து போலீசார் செளபாவை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட செளபா மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார் செளபா. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவர் சிறையில் ரத்த வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அவர் மரணமடைந்தார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications