கோவையில் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த காதல் ஜோடி தற்கொலை
கோவை: கோவையில் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கதால் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது.
நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்தவர் யோகராஜ்(20). அவர் பினுமோள்(19) என்பவரை காதலித்தார். அவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு அதே ஊரில் வசிக்க அவர்களுக்கு பிடிக்கவில்லை. இதையடுத்து அவர்கள் 3 மாதங்களுக்கு முன்பு கோவை பீளமேடு பகுதியில் உள்ள வெற்றிநகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர்.
யோகராஜ் கோவையில் உள்ள ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றினார். இந்நிலையில் நேற்று காலை வெகுநேரமாகியும் யோகராஜின் வீடு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் அக்கம்பக்கத்தினர் சந்தேகப்பட்டு ஜன்னல் வழியே எட்டிப்பார்த்து அதிர்ந்தனர். காரணம் யோகராஜும், பினுமோளும் தூக்கில் பிணமாகத் தொங்கிக் கொண்டிருந்தனர்.
உடனே அக்கம்பக்கத்தினர் இது குறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களின் வீட்டில் சோதனை நடத்தியபோது இளம் ஜோடி எழுதி வைத்திருந்த கடிதம் கிடைத்தது.
அந்த கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது,
அன்புள்ள அப்பா, அம்மாவுக்கு எங்கள் இருவரையும் மன்னித்து விடுங்கள். உங்கள் எதிர்ப்பையும் மீறி நாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டோம். உங்களை நாங்கள் மிகவும் சங்கடப்படுத்திவிட்டோம். எங்கள் உடலை சொந்த ஊரில் புதைத்து விடுங்கள் என்று அவர்கள் அதில் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து யோகராஜ் மற்றும் பினுமோளின் பெற்றோருக்கு போலீசார் தகவல் கொடுத்தனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications