ஷாக்.. சார்ஜ் போட்டுக்கொண்டே செல்போனில் அரட்டை.. மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி.. சென்னையில் சோகம்
சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் செல்போனில் சார்ஜ் போட்டுக்கொண்டு பேசிய இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பற்றிய விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
தற்போதைய நவீன காலத்தில் மக்களிடையே செல்போன்கள் பயன்பாடு அதிகரித்து விட்டது. அதே நேரத்தில் செல்போன்கள் வெடித்து உயிரிழப்பு கூட ஏற்படும் துயர சம்பவங்களும் அவ்வப்போது நடைபெற்று வருவது பேரதிர்ச்சி அளிப்பதாக அமைந்து இருக்கிறது.

இதற்கு சார்ஜ் போட்டுக்கொண்டே செல்போன்களை பயன்படுத்துவது.. நீண்ட நேரம் செல்போன்களில் விளையாடிக்கொண்டே இருப்பது என பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. குறிப்பாக உதிரிபாகங்கள் போலியானவை கடைகளில் மாற்றும் போது அங்கீகரிக்கப்படாத சார்ஜர்களை உபயோகப்படுத்தி செல்போன்களை சார்ஜ் செய்யும் போது இப்படி செல்போன் பேட்டரிகள் வெடித்து விபத்துக்கள் நிகழ்வாக பரவலாக செல்போன் உற்பத்தி நிறுவனங்கள் தரப்பிலும் சொல்லப்படுகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட கேரள மாநிலத்தில் தந்தையின் செல்போனில் கேம் விளையாடிக்கொண்டு இருந்தபோது செல்போன் வெடித்ததில் 8-வயது சிறுமி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை அளித்தது. இந்த நிலையில், சென்னையில் செல்போனின் சார்ஜ் போட்டபடியே பேசிக்கொண்டு இருந்த போது மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-
சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள கெனால் தெருவில் காமராஜ் (வயது 22) என்ற இளைஞர் தனியாக வசித்து வந்தார். வண்னாரப்பேட்டை மூலக்குளம் பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் மாஸ்டராக பணியாற்றும் இவர் , வேலை முடிந்த பிறகு தனது அறையில் வந்து தங்குவார். அவர் மட்டுமே தனியாக வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்துள்ளார்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று தனது நண்பருடன் மெரினா கடற்கரைக்கு சென்று சுற்றிப்பார்த்துவிட்டு தனது அறைக்கு திரும்பினார். பின்னர் தனது அறையில் வைத்து செல்போனில் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்து இருக்கிறார். செல்போனில் சார்ஜ் குறைவாக இருந்ததால் சார்ஜ் போட்ட படியே போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது தீடிரென மின்சாரம் தாக்கியதல் அலறியுள்ளார்.

இந்த சத்தத்தைக் கேட்டு பதறியடித்து வந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு சென்று பார்த்த போது காமராஜ் மயங்கி கிடந்துள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பார்த்துள்ளனர். அப்போது காமராஜ் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து காமராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
செல்போனில் சார்ஜ் போட்டபடியே பேசிக்கொண்டு இருந்த போது மின்சாரம் தாக்கியதில் 22-வயது இளைஞர் பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்போன்களை சார்ஜ் போட்ட படி பயன்படுத்தக்கூடாது எனவும் இப்படி பயன்படுத்தினால் பேட்டரி வெடித்து விபத்து ஏற்படுவது அல்லது மின்சாரம் தாக்குவது போன்ற அபாயங்கள் ஏற்படும் எனவும் எனவே இத்தகைய செயல்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் கூறும் அறிவுரையாக உள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications